அருள் நிலையில் பாடப்படும் கவிதைகளை ஞானியர்கள் இன்றைய காதல்பித்து கவிஞர்களைப்போல உட்கார்ந்து எழுதி எழுதிப்பார்ப்பத்து எழுதுவதில்லை
அல்லது தயாரிப்பாளர் செலவில் லாட்ஜில் தண்ணியடித்துக்கொண்டு உளறி உளறி எழுதுவதுமில்லை
உள் உணர்வு மிகுந்தவுடன் பிரவாகமாக கொட்டிவிடுவார்கள்
அதில் ஆழமான அர்த்தமும் அருள்பொழிவும் மிக உயர்ந்த இலக்கணத்தோடு தானாக வரும் என்பதற்கு சாலையாரின் இக்கவியும் ஓர் உதாரணம்
அவர் எந்தக்கல்லுரியிலும் படித்ததில்லை அல்லது பாண்டிதர்களை அணுகி இலக்கணமும் கற்கவில்லை
இவ்வளவு சிக்கலான நடையை பெரும் தமிழ் பண்டிதர்களாலும் விளக்க முடியாது
சிலவேளைகளில் எளிமை என்பதைவிட கடுமையான நடையை ஞானியர்கள் பின்பற்றுவதற்கு காரணம் உண்டு
அதன் திறவுகோல் குருபக்தியின் சூட்சுமமாகும்
நிச்சயமாக அந்த சபைக்காரன் என அடையாளம் தரித்துக்கொள்வதைக்காட்டிலும் எப்ப பார்த்தாலும் ஆண்டவர் ஆண்டவர் இவர்தான் கடவுள் என செம்படிப்பதைக்காட்டிலும் உள்ளார்ந்த ஆத்மதாகம் உன்னதமான கடவுளை அடைவதற்கான அசராத தாகம் எதனுடனும் இதுதான் கடவுள் என மயங்கிநிற்காத தாகம் உள்ள நபரை குருமார்கள் ஆசையாக அரவணைப்பார்கள்
குருவைத்தேடுகிற சீடனாக இருப்பது என்பது அடித்தட்டு ஆன்மீிகம்
குரு தேடுகிற சீடனாக இருப்பது என்பது முன்னேறிய ஆன்மீிகம்
தன் பெருமை பேசித்திரிகிற மூட சீடர்களைக்காட்டிலும் தன் ஞானத்தை உள்வாங்கி வளர்த்தெடுக்கிற சீடனை குருவின் இதயம் தேடிக்கொண்டே இருக்கும்
தன்னை விட கடவுளை அடையும் தேடலுள்ள சீடனையே மெய்ஞானிகள் அதிகம் நேசிப்பார்கள்
அந்த உள்ளார்ந்த பக்தியோடு சாலையாரை அணுகினால் வள்ளல்பிரானின் அன்பைப்போல போல சாலையாரின் அன்பையும் பெறலாம்
இல்லறம் என்பது முதலாவது உன் ஆத்மா வாழும் வீடாகிய உன் சரீரத்தில் இறைவனின் அருள் பேறுகளை நிரப்புவது என்றார் சாலையார்
உயிரே கடவுள் என்ற உண்மைத்தத்துவத்தை தமிழகத்தில் விதைத்த ஞானி ஈஸ்வரபட்டரும் சப்த ரிஷிகளின் அருள்பேராற்றல் என்னை நிரப்ப அருள்வாய் ஈஸ்வரா துருவமகரிஷியின் அருள்சக்தி என்ன நிரப்ப அருள்வாய் ஈஸ்வரா என அனுதினமும் பிரார்த்தித்து ஏங்கும்படியாக வழிகாட்டியுள்ளார்
உன் சரீரமாகிய உடலுக்கு அறத்தை ஈவதே இல்லறம்
மனித சரீரத்தின் மேன்மை ஏதென்றால்
ஐந்து புலனறிவுடன்
ஆறாவது பகுத்தறிவு என்னும் பகுத்து வகுத்து ஆய்ந்து அறியும் நுன்மான்நுழை புலம்
மனித மூளைக்கு மட்டுமே உண்டு
எனக்கு
விளங்கவில்லையே புரியவைப்பீராக என ஒரு விவரம் குறித்து மனிதன் தொடர்ந்து இறைவனிடம்
வேண்டிவந்தால் அதுதொடர்பான நிகழ்வுகளால் நமக்கு அதை இறைவன் எடுத்துக்கொடுப்பார்
அந்த நிகழ்வுகளால்
அனுபவங்களால் உனக்குள் பட்டறிவு விளக்கம் உண்டாகும்
உன் சொந்த ஐந்து
புலன்களையும் அவற்றின் உணர்வுகளையும் அறிவையும் இந்த ஆறாவது அறிவு ஈர்த்து
உள்புகுந்து ஆளும் காந்த வல்லமை உள்ளது
கிரகணம் என்றால்
கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வருவதால் காந்தவிசை வலிமை பெற்று ஈர்க்கும்
ஆறாவது அறிவால்
கட்டி இழுக்கப்பட்டு வழிநடக்கும் ஐந்து புலன்களையும் அறிவையும் பெருங்கிரண ஆறு
புரி வடம் என்கிறார் சாலையார்
இந்த ஆறாவது
அறிவின் மேன்மை என்னவென்றால் ஆறாவது அறிவு உள்ளோரால்
மட்டுமே பிரார்த்தனை செய்யமுடியும்
விலங்குகள் பக்தி
செய்வதில்லையா என்றால் : இல்லை
அவைகளின்
இயல்புக்கத்தின் படியாக அவைகள் வாழ்ந்து மடிகின்றன
அவைகளுக்கு உள்ள
அறிவுகளைக்கொண்டு அனுபவித்து மடிகின்றனவே தவிர அவைகள் எதையும் மேம்பாடு செய்து
கொள்வதில்லை
பாவபுண்ணியமும்
அவைகளுக்கு சேர்வதில்லை
சிலகாலம் அவைகள்
அலைந்து திரிந்து அனுபவிக்கின்றனவே தவிர எந்த அறிவையும் ஞானத்தையும் மேம்பாடு
செய்துகொள்வதில்லை
ஆனால் மனிதன்
அப்படியில்லை
அனுதினமும் பாவமோ
புண்ணியமோ அவனில் அதிகரிக்கின்றன
இன்பம் துன்பம்
சஞ்சலம் சோர்வு ஏக்கம் என அவனை வாட்டிவதக்கி அவனுக்கு ஞானம் பட்டறிவு விளைகிறது
ஆகவேதான் அரிது
அரிது மாநிடராகப்பிறப்பது அரிது என்றார்கள்
மனிதனானகப்பிறந்து
விட்டாலே அவன் விசேசமானவன்தான்
கடவுளின் சாயலில்
அவன் உள்ளான்
கடவுளைப்போலவே
கொஞ்சம் படைப்பாற்றலும் அவனுக்கு உண்டு
என்றாவது ஒரு
பிறவியில் கடவுளைப்போலவே முழுமையானவனாக வளர்ந்து அவன் பரலோகத்தில் பிரவேசிப்பது
அவனுக்கு ஏற்கனவே வாக்களிக்கப்பட்டு விட்டது
எந்த மனிதனும்
வாக்களிக்கப்பட்டவன் என்பதாலேயே எப்பேர்பட்ட கொடியவனும் திருந்தட்டும் என
இறைவனிடம் நாம் வேண்டுதல் செய்யவேண்டியுள்ளது
முற்பிறவியில்
இவனைப்போலவே நாமும் இருந்து இன்றைய முன்னேற்றத்தை அடைந்திருக்கிறோம் என்ற
ஞானத்தால் யாரையும் தீர்க்காதிருக்கும் ஞானத்தை சற்குருநாதர்கள் நமக்கு
உபதேசித்தார்கள்
அருங்கிரண ஈமானை
ஈயும் காயமாகும்
மனித சரீரம்
அருமையான பக்தி ஞான யோகத்தை வளர்க்கும் ஸ்தலமாகும்
சுக்லாம் பரதரும்
விஷ்ணும் சசிவர்ணம் என்பதே பரிசுத்த தொடக்கம்
உன் உடல் அந்த
பரிசுத்த தொடக்கத்தோடேயே பூமியில் வெளிப்பட்டுள்ளது
தத் சத் அது நீயாக
இருக்கிறாய்
சகலமும் எதுவோ அது
உனக்குள்ளும் இருக்கிறது
தத் சத் அது நீயாக
இருக்கிறாய்
நீயே அது நீயே
இறைவன் என உனக்கு சர்டிபிகேட் கொடுத்து ஞானத்தை விற்கும் சுயபெருமைக்காரர்களிடம்
ஏமாறாதே
நீயே அதுவல்ல ; அது நீயாகவும் இருக்கிறது இன்னும்
அநேகமாகவும் இருக்கிறது உனக்கு அடுத்தவராகவும் இருக்கிறது
நீ காண்கிற
மனிதர்களெல்லாம் கடவுளின் சாயலில் உள்ளவர்கள்
கடவுளின்
சொருபங்கள்
மனிதனை
அவமதிப்பதும் கடவுளை அவமதிப்பதும் ஒன்று
கடவுளின் மீது
பக்தி செலுத்துவது உண்மையானால் மனிதர்களை அவமதிக்க உன் உள்ளம் கூசும்
உன்னை
நேசிப்பதுபோல உன் அயலானையும் நேசிப்பாயாக என்பதில் சகல வேதங்களின் சாரமும்
இருக்கிறது என்றார் சற்குரு இயேசு
உனக்கு அயலானாக
நடமாடும் கடவுளின் சாயலை மதிப்பதே பக்தி
கடவுளை நேசிக்கும்
அன்பே மனித நேயமாக பரிணமிக்கும்
பக்தி
இல்லாதவர்களின் மனிதநேய பகட்டு சுயபெருமை கூச்சல்
தங்களை பிறர்
மதிக்கவேண்டும் என்பதற்காகவும் தங்களின் ஆதிக்கத்திற்காகவும் சுயநலவாதிகள் மனித
நேயம் மனித நேயம் என பகட்டாக பேசுகிறார்கள்
கடவுளை
நம்பாதவர்களின் மனித நேயம் சுயநலம் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது
ஓம் தத் சத்
ஓரிறைவனையே
நமஸ்கரிக்கிறோம் அவன் நீயாகவும் இருக்கிறான் என்கிறான் மெய்ஞானி
ஓம் தத் சத்
ரஜோகுணம் ஆகிய
சுயநலத்தில் இறைவனின் பேரருள் கலந்தால் அவன் அறிவு பறந்து விரிந்து சத்துவ
குணமுள்ளவனாக மாறிவிடுவான்
ஆகவேதான் தன்னை
நாடிவரும் சீடர்களுக்கு குருவானவர் பாலமாக இருந்து இறைவனின் நற்பேறுகளை வாரிவாரி
வழங்குகிறார்
ரஜோகுணம் சத்வ
குணமாக பரிமளிக்கும்
வருங்கிரண ஜோதிரஜோ
தத்சத்தாகும்
விஸ்வாமித்ரர்
அருளிய காயத்ரி மந்திரமே காயகல்ப மந்திரம் என்பார்கள்
ஓம் பூர் புவஸ்கக
பூர்வ
புண்ணியங்கள் என்னை அபிசேகிக்கட்டும்
ஆதியில்
நாமெல்லோரும் ஆதமும் அவரது முதுகெலும்பிற்குள் நாமும் அருள் நிலையிலேயே படைக்கப்பட்டோம்
ஆதி கிருத
யுகத்தில் சிவனாரின் நேரடி வழிகாட்டலில் உலகம் முழுதும் நாமும் தர்மத்திலேயே
நிலைத்திருந்தோம்
பிற்பாடே அசுர
மாயைகளுக்கு ஆளானோம்
ஓரிறைவனையே
நமஸ்கரிக்கிறோம் : அவர் பூர்வ புண்ணியங்களால் எண்ணை நிரப்பட்டும்
ஓம் பூர் புவஸ்கக
வளரமுதம் பிர்மா
பூர்புவஸ் வரோமாகும்
அரும்பிரணவம்
கலிமாவாகும்
ஓம் பிரணவத்தின்
அர்த்தம் என்ன ?
அதுவா அதன்
அர்த்தத்தை சிவனும் மறந்துவிட்டார் பிரம்மா முதலான தேவர்களும் மறந்துவிட்டார்கள்
அதை முருகன்
ரகசியமாக சிவனின் காதில் ஓதினார் என சொல்வார்கள் ; இப்படி சொல்வதால் அதன் அர்த்தத்தையும் அறிந்துவிட்டதாக நம்பிக்கொள்கிறார்கள்
என்ன ஓதினார்
ஓம் ஓம்
ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம் ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
கலிமா
அவன் அளவற்ற
அருளாளான் - அருட்பெருஞ்சோதி
நிகரற்ற
அன்புடையோன் - தனிப்பெருங்கருணை
சாலையார்
சொல்கிறார் அரும்பிரணவம் ஆகும் கலிமாவாகும்
கலிமாதான் பிரணவம்
என்கிறார்
அவன் அளவற்ற
அருளாளான்
நிகரற்ற
அன்புடையோன் - கலிமா குர்ஆனில் வெளிப்படுத்தப்பட்டது
சைவ இசுலாமின்
ஸ்தாபகரான வள்ளல்பிரான் சொல்கிறார் இப்போது இறைவன்
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்சோதி
என்ற மந்திரத்தை
எடுத்துக்கொண்டார் என்கிறார்
இவை இரண்டும்
சொல்லும் ஞானம் என்ன ஓரிறைவன்
ஓரிறைவனையே
நமஸ்கரிக்கிறோம் என்பதே பிரணவம்
ஓம் நம் சிவாய
என்பதே உன் இல்லம் சரீரமாகும் சிவனாக சரீரமாக வெளிப்பட்ட அந்த ஓரிறைவனையே
நமஸ்கரிக்கிறோம்
சிவன் சரீரத்தின்
அதிபதி
கடவுளின் சாயலில்
முதல்முதலில் வெளிப்படுத்தப்பட்ட மனிதன் சிவன் ஆதம்
சிவனின்
நாமத்தினாலே ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம் என்பதும் என் சரீரத்தின் மூலமாக இறைவனை
நமஸ்கரிக்கிறேன் என்பதும் ஒன்று
ஐந்தெழுத்து
மந்திரம் உன் இல்லம் சரீரமேயாகும்
எட்டெழுத்து மந்திரம் ஓம் நமோ நாராயணாய
நாராயணனாக வெளிப்பட்ட அந்த ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
இறைவன் சகலவற்றையும் ஏதோ ஒன்றை கொண்டுதானே படைத்திருக்க வேண்டும்
அந்த மூலப்பொருள் பரமாத்மா நாராயணன்
அந்த நாராயணன் மூலமாக இறைவனை வழிபடுவதும் உன் ஆத்மாவின் மூலமாக இறைவனை வழிபடுவதும் ஒன்று
சற்குரு இயேசு சொன்னார் : இறைவனை அந்த கோயிலில் தொழுதுகொள்ள வேண்டும் இந்த பள்ளிவாயிலில் தொழுதுகொள்ள வேண்டும் என இதுவரை சொல்லப்பட்டது வந்தது .அதன் தரம் உயர்ந்துவிட்டது
21. அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.
23. உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
24. தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
தேவன் கடவுள் ஆவியாக இருக்கிறார் முற்றுயிராக இருக்கிறார்
வெட்டவெளியே பிரபஞ்சத்தை விட பல மடங்கு பெரியது . பிரபஞ்சம் நாராயணன் பரமாத்மா என்றால் அது தங்கி வளர்வது எதில் என்றால் வெட்டவெளியில் அந்த வெட்டவெளியில் ஈதர் என்றொரு ஆவி இருப்பதாக சொல்கிறார்கள்
அந்த ஆவியே இறைவன் நாராயணனாக வெளிப்பட்டு அதில் தனது சாயலாக சிவனை வெளிப்படுத்தினார்
சைவர்கள் இதில் சண்டைக்கு வரவேண்டியதில்லை
நாராயணனுக்குள் சிவன் படைக்கப்பட்டாலும் நாராயணனை விட பெரியவரான இறைவனின் சாயலில் சிவன் படைக்கப்பட்டார் என்பது விசேஷமானது
அதனால் அவரை உடனடியாக அங்கீகரித்து தனது அம்சமான நாராயணியை அவருக்கு மனைவியாக்கி நாராயணன் அங்கீகரித்து விட்டார்
தேவர்கள் அசுரர்கள் என்ற பிரிவினை பரமண்டலத்தில் உண்டானதே சிவன் என்ற ஆதமின் படைப்பினால்தான் என்றே குரானும் பைபிளும் சொல்கின்றன
தேவர்களில் யார் சிவனை அங்கீகரிக்காதவர்களோ அவர்களே அசுரர்களாகி இறைவனோடு சண்டை போடுகிறவர்களாக மாறினார்கள்
இங்கு இயேசு சொல்கிறார் இறைவன் முற்றுயிராக உள்ளார்
அவரைத்தொழுதுகொள்கிரவர்கள் ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள வேண்டும்
மனிதனுக்கு ஆவி அவனுக்குள் ஓடும் உயிர்
உண்மை எது
உன் சரீரமும் அதற்குள் இருக்கும் உன் ஆத்மாவுமே உண்மை
எது உண்மை
உனக்கு எது தெரிந்திருக்கிறதோ அதுவே உன்னைப்பொறுத்த அளவில் உண்மை
அது உன் ஆத்மாவில் அறிவாக அனுபவமாக ஞானமாக பொதிந்து உன் சரீரத்தைப்போன்ற சூக்கும சரீரமாக இருக்கிறது
அழிவில்லாத உன் ஆத்மாவே உண்மை
அந்த சூக்கும சரீரத்தை ஒளி சரீரமாக வளர்த்துக்கொண்டால் பிறகு உனக்கு அழியக்கூடிய ஸ்துல சரீரம் தேவைப்படாது இதுவே மரணமில்லா பெரு வாழ்வு பரலோகத்தில் நுழைந்து தேவராக வாழத்தொடங்கி விடுவோம்
எப்படியாயினும் ஆத்மாவும் சரீரமும் இருந்தால் மட்டுமே நீ மெய்
இல்லாவிட்டால் நீ பொய்
இருப்பாய் ஆனால் இல்லாதவனைப்போல செயல்படாமல் இருப்பாய்
ஆவியோடும் மெய்யோடும் நீ இறைவனைத்தொழுதுகொள்ளவேண்டும் என்பதே இயேசுவின் உபதேசம்
மொழிபெயர்த்தவர்கள் உணமையோடு என மொழிபெயர்த்துவிட்டார்கள்
ஆவி அருபமாக இருக்கிறது
ஆத்மாவும் சரீரமும் மெய்யாக இருக்கிறது அதாவது உனக்குள் உள்ள சிவனின் அம்சமும் நாராயணனின் அம்சமும் சேர்ந்தால் மட்டுமே மெய்
அந்த மெய்யைக்கொண்டு ஆவியாகிய இறைவனில் நீ நிலைத்திருந்தால் அதுவே யோகம் அதுவே அருள் வாழ்வு அதுவே ஈமான்
அண்டத்தில் உள்ளது எதுவோ அதுவெல்லாம் உன் பிண்டத்திலும் இருக்கிறது என்பதே மனிதபிறப்பின் சிறப்பு
பிண்டத்தில் சரீரத்தையும் ஆத்மாவையும் பயன்படுத்தி உன் உயிரில் நிலைத்து தியானம் செய்யவேண்டும்
ஆவியோடும் மெய்யோடும் நீ இறைவனைத்தொழுதுகொள்ளவேண்டும் என்பதே இயேசுவின் உபதேசம்
மொழிபெயர்த்தவர்கள் உணமையோடு என மொழிபெயர்த்துவிட்டார்கள்
ஆவி அருபமாக இருக்கிறது
ஆத்மாவும் சரீரமும் மெய்யாக இருக்கிறது அதாவது உனக்குள் உள்ள சிவனின் அம்சமும் நாராயணனின் அம்சமும் சேர்ந்தால் மட்டுமே மெய்
அந்த மெய்யைக்கொண்டு ஆவியாகிய இறைவனில் நீ நிலைத்திருந்தால் அதுவே யோகம் அதுவே அருள் வாழ்வு அதுவே ஈமான்
அண்டத்தில் உள்ளது எதுவோ அதுவெல்லாம் உன் பிண்டத்திலும் இருக்கிறது என்பதே மனிதபிறப்பின் சிறப்பு
பிண்டத்தில் சரீரத்தையும் ஆத்மாவையும் பயன்படுத்தி உன் உயிரில் நிலைத்து தியானம் செய்யவேண்டும்
அதைப்போல அண்டத்தில் அதிதேவர்கள் நாராயணன் மூலமாகவும் சிவனின் மூலமாகவும் முற்றுயிரான இறைவனை அதாவது அல்லாவை வழிபடவேண்டும்
அல்லாவே நாராயணனாகவும் சிவனாகவும் வெளிப்பட்டு அவர்கள் மூலமாகவே சகலத்தையும் நிர்வாகம் செய்கிறார்
அவர்களை விட்டுவிட்டு அல்லா நேரடியாக எதையும் செய்வதில்லை
அல்லா எதைச்செய்தாலும் காப்ரியேல் மைக்கேல் என்ற அதிதேவர்கள் மூலமாகவே செய்கிறார் என்பதை குரானிலும் பைபிளிலும் காணலாம்
ஆகவே பிரார்த்தனையில் நாராயணன் நாமத்தாலும் சிவனின் நாமத்தாலும் இறைவா அல்லாஹ் என வழிபடுவதே மிக மிக சரியானது
கலியுகத்தில் மாச்சரியங்கள் இருக்கட்டும் என்பதால் இந்த ஞானம் வெளிப்படாமல் தனித்தனியாக அல்லாவுக்கு ஒரு மார்க்கமும் நாராயணனுக்கு ஒரு மார்க்கமும் சிவனுக்கு ஒரு மார்க்கமும் போல வேறுவேறுபோல வெளிப்பட்டு சண்டை செய்துகொண்டுள்ளனர் மனிதர்கள்
வரப்போகிற சமரச வேதமோ இவைகளை சமரசப்படுத்துவதுடன் இயற்கை விளக்கமான அத்வைதத்துடனும் சமரசப்படுத்திவிடும்
உள்முக தியானத்தையும் வெளிமுக பிரார்த்தனையையும் நல்லிணக்கப்படுத்தி வழிநடத்தும்
ஆறு சுவையான மார்க்கங்களை சமரசப்படுத்தும் சமரச சத்திய சன்மார்க்கம் அகாரமாகிய ஆதி இறைவனை நோக்கிய மார்க்கமாக விளையும்
அப்போது தலைமைப்பதி &
அல்லாவே நாராயணனாகவும் சிவனாகவும் வெளிப்பட்டு அவர்கள் மூலமாகவே சகலத்தையும் நிர்வாகம் செய்கிறார்
அவர்களை விட்டுவிட்டு அல்லா நேரடியாக எதையும் செய்வதில்லை
அல்லா எதைச்செய்தாலும் காப்ரியேல் மைக்கேல் என்ற அதிதேவர்கள் மூலமாகவே செய்கிறார் என்பதை குரானிலும் பைபிளிலும் காணலாம்
ஆகவே பிரார்த்தனையில் நாராயணன் நாமத்தாலும் சிவனின் நாமத்தாலும் இறைவா அல்லாஹ் என வழிபடுவதே மிக மிக சரியானது
கலியுகத்தில் மாச்சரியங்கள் இருக்கட்டும் என்பதால் இந்த ஞானம் வெளிப்படாமல் தனித்தனியாக அல்லாவுக்கு ஒரு மார்க்கமும் நாராயணனுக்கு ஒரு மார்க்கமும் சிவனுக்கு ஒரு மார்க்கமும் போல வேறுவேறுபோல வெளிப்பட்டு சண்டை செய்துகொண்டுள்ளனர் மனிதர்கள்
வரப்போகிற சமரச வேதமோ இவைகளை சமரசப்படுத்துவதுடன் இயற்கை விளக்கமான அத்வைதத்துடனும் சமரசப்படுத்திவிடும்
உள்முக தியானத்தையும் வெளிமுக பிரார்த்தனையையும் நல்லிணக்கப்படுத்தி வழிநடத்தும்
ஆறு சுவையான மார்க்கங்களை சமரசப்படுத்தும் சமரச சத்திய சன்மார்க்கம் அகாரமாகிய ஆதி இறைவனை நோக்கிய மார்க்கமாக விளையும்
அப்போது தலைமைப்பதி &
தனிதலைமைப்பதி உலகைவழிநடத்த வருவார்கள்
தலைமைப்பதி என்றால் பரமாத்மா ஈசாநபி
தலைமைப்பதி என்றால் பரமாத்மா ஈசாநபி
தனி தலைமைப்பதி என்றால் முகமதுநபி
தனி அலுவலர் என்றால் அரசனுக்காக செயல்படுபவர் சுயமாக எதையும் செய்யமாட்டார்
மேலே கேட்டுத்தான் எதையும் செய்வார்
தனித்தலைமைப்பதி என்றால் இறைவனுக்காக பூமியில் செயல்படும் இறைதூதர் நபி என்றே அர்த்தமாகும்
சாலையாரின் வார்த்தைகளை கவணியுங்கள் சிந்தையற்ற
சுயமாக எதையு செய்யாமல் இறைவன் சொல்வதை மட்டும் பூமியில் செய்பவர் நபி
கலியுக முடிவிலே சமரச வேதாந்தி ஒருவர் வருவார் என எல்லா மதங்களிலும் உள்ளது
உன் மெய்யாகிய வீட்டிலே உயிராகிய இறைவனில் நீ நிலைத்து நின்று தியானித்து வந்தாலும் நாராயணன் நாமத்தாலும் சிவனின் நாமத்தாலும் இறைவா என வழிபாட்டு வந்தாலும் இந்த மேன்னை யாவற்றையும் நீ அடைவாய்
இல்லறத்தில் முக்தி பெற்றால் கிரகஸ்தனாகலாம்
உன் சரீரத்திற்கும் அதில் வாழும் உன் ஆத்மாவிற்கும் அனுதினமும் இறைவனின் நற்பேறுகளை நிரப்பிவருவது இல்லறம் என்றால் அதில் பழுத்து கொட்டை போட்டால் நீ கிரகஸ்தனாகலாம்
இறைவனின் அருள்பேறுகள் உன்னுள் பெருகி பாவபுண்ணியங்கள் சமப்பட்டால் ; பரிசுத்தம் மேல் பரிசுத்தம் அடைந்தால் கிரகங்கள் உன்னிடம் வேலை செய்யாது என்கிறார் சாலையார்
கிரகங்கள் வேலை செய்யாத அளவு உனது பாவபுண்ணியங்கள் அஸ்தமனம் அடைந்தால் நீ கிரக + அஸ்தன் = கிரகஸ்தன்
ஒரு மனிதனின் ஆத்மாவில் பாவபுண்ணியங்கள் எவை எவை உள்ளனவோ அவைகளை தமது சஞ்சாரத்தால் உண்டாகும் ஒளி அலைகள் மூலமாக கிரகங்கள் தூண்டி விடுகின்றன
பக்தி யோகா மார்க்கங்களில் அப்பியாசித்து வரும் சாதகர்கள் எவ்வளவுக்கெவ்வளவு அருள் பேறுகளை பெருக்கி கொள்கிறீர்களோ அவ்வளவு ஆத்ம உள்ளொளி கிரகங்களின் ஒளி அலைகளை குணம் மாற்றி விடும்
ஆகவே கிரகம் உங்களிடம் வேலை செய்யாது
இல்லறத்தின் முக்தி நிலை இதுவே



கிரகங்கள் வேலை செய்யாத அளவு உனது பாவபுண்ணியங்கள் அஸ்தமனம் அடைந்தால் நீ கிரக + அஸ்தன் = கிரகஸ்தன்
ReplyDelete