Total Pageviews

Saturday, June 3, 2017

காப்பு பாடல்



அமுத கலைஞானம் என்பது மகா குரு சாலை ஆண்டவரால் இயற்றப்பட்டது

கவிகளாக கேள்வி பதிலா போல அற்புதமாக நமது பாராம்பரிய வேத ஞானங்களை சொல்லியுள்ளார்

பல ரகசியங்கள் உள்ளன


வாசிமலர்பாதமடி வணங்குகிறேன் என சாலையார் யாரை வணங்குகிறாரோ அவரே வாலை

சித்தர்களின் குரு அவளே

இவளை பாலாம்பிகை என்றும் சொல்வார்கள்

குண்டலினியும் இவளே இவளின் அனுக்கிரகத்தை சாலையார் வேண்டியுள்ளார்

கன்னியாகுமரியும் இவளே இவளின் அனுக்கிரகம் இல்லாமல் யோகவாழ்வில் முன்னேறவே முடியாது

சகல ஞானிகளும் இவளின் கிருபை பெற்றே முன்னேறினர்

கடவுல் அல்லது இறைவனுக்கு அடுத்த நிலையில் நான்கு அதிதேவர்கள் உள்ளனர் அவர்களில்  அன்னை நாராயணியை வாலை என்ற குழந்தையாக உணராமல் யோகமும் சித்திக்காது ஞானமும் வராது

நவீன நாத்திக நெடிக்குள் சிக்கிக்கொண்டு ஞானம் வந்ததுமாதிரியும் வராதுமாதிரியும் உலப்பிகொன்டே திரியவேண்டியதுதான்

உலகளாவிய வரப்போகிற சமரச வேதத்தின் வித்துகளாக ஆங்காங்கே சில ஞானிகளை இறைவன் எழுப்பிக்கொண்டுதான் இருக்கிறார்

இந்தியாவில் வள்ளலார் சாலை ஆண்டவர் ஐயா வைகுண்டர் நாராயணகுரு போன்றோர் அனைவரும் சமரச வேதத்தின் வித்துக்களே

சுகப்பிரம்மம் அல்லது சுகர் என்பவர் ஆதிரிஷிகளில் ஒருவர் . அவர் முதலாக ஓய்சுல் கர்னைனன் வரை ஜனாகாதிமுனிவர்கள்

சுகப்பிரம்மத்தை இந்தியர் அறிவார்கள்

யார் இந்த ஓய்சுல் கர்னைனன்

முனிவர்களுள் ஒருவர் என்கிறாரே சாலையார் குர்ஆனில் இவரைப்பற்றி முகமதுநபிக்கு  கடவுள் செய்தி சொல்லியுள்ளார்

18:83. (நபியே!) அவர்கள் துல்கர்னைனை பற்றி உங்களிடம் வினவுகின்றனர்; “அவருடைய வரலாற்றில் சிறிது உங்களுக்கு நான் ஓதிக் காண்பிக்கிறேன்” என்று நீர் கூறுவீராக.

18:93. இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓரிடத்தை) அவர் எய்தியபோது, அவ்விரண்டிற்கும் அப்பால் இருந்த ஒரு சமூகத்தாரைக் கண்டார்.

18:94. அவர்கள் “துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் (அதாவது இடும்பரும் கொடும்பரும்) பூமியில் குழப்பம் - செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?” என்று கேட்டார்கள்.

18:95. அதற்கவர்: “என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது; ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; நான் உங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஓர் உறுதியான தடுப்பை ஏற்படுத்தி விடுகிறேன்”என்றுகூறினார்.

18:96. “நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்” (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் “உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்” (என்றார்).

18:97. எனவே, (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை

 18:98. “இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே” என்று கூறினார்.


இப்படி ஒரு நிகழ்வு எந்த நாட்டிலும் நடக்கவில்லை குரான் இறங்கியபோது வரப்போகிற நிகழ்வின் உவமானமாகவே இறக்கப்பட்டுள்ளது

இந்த துல்கர்நைணன் வேறு யாருமல்ல சாலை ஆண்டவரே

அவர்  உயிர் பிரியாமல் உடம்பிலே அடங்கியிருக்கும் ஜீவ அடக்கம்  தன் சீடர்களுக்கு கொடுத்து அவர்களை பரிசுத்த அடக்கம் செய்யும் மெய்வழி சாலைகளை அமைத்து வருகிறார் . இந்த மெய்வழி சாலையில் சேர்ந்து ஜாதிமத பேதமில்லாமல் தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுத்து சகோதரத்துவ அன்புடன் குழு வாழ்வாக பலர் வாழ்ந்து வருகிறார்கள்


இவர்களை உலக மாசுகளும் அசுர ஆவிகளின் தாக்குதலும் இல்லாமல் நிம்மதியான ஆன்ம வாழ்வை சாலை ஆண்டவர் கொடுத்து வருகிறார்

இப்படி உலகத்திலிருந்து விடுபட்ட தர்மத்தீவாக மெய்வழிச்சாலை இருக்கும் என்பதே குர்ஆனில் முன்னறிவிக்கப்பட்டுள்ளது

இதுபோல கேரளாவில் சித்த வித்யார்த்திக்ளும் பரிசுத்த அடக்கம் ஆகிறார்கள்

இவர்கள் அடங்கிய பிறகு மண்ணில் உடல் அழியாமல் பாதுகாக்கப்படுகிறது

ஜீவ அடக்கம் ஆவதால் கலியுக முடிவு வரை மறுபிறவி எடுத்து பூமியில் அல்லாடாமல் இறைவனது அருளுக்குள் இந்த ஆத்மாக்கள் பாதுகாக்கப்படுவார்கள் ஆனால் இதை தவறுதலாக மரணமில்லா பெருவாழ்வு என சீடர்கள் சொல்கிறார்கள் வேதம் அறியாத சீடர்கள் சிலர் சாலையாரே  கடவுள் எனவும் பீலா விடவும் செய்கிறார்கள்

காலம்காலமாக முனறிவிக்கப்பட்ட வேதங்களின்படியாக கல்கி அல்லது ஈசா நபி திரும்ப வரும்போது அடக்கம் செய்யப்பட்டவர்கள் பிரணவ தேகத்தில் உயிரோடு எழுப்பப்படுவார்கள்

இந்த சேனை பிரணவ தேகத்தில் இருப்பதால் இவர்களை கொல்லமுடியாது

இவர்களை வைத்துத்தான் எஞ்சிய மனிதர்கள் அல்லது அவர்களை தூண்டி விட்டு கலகம் செய்யும் யஜ்ஜுத் மஜ்சுத ஆவிகளை அடக்கி பூமியில் சத்ய யுகத்தை நிறுவ முடியும்

சத்ய யுகத்தை நிறுவ தேவைப்படும் கல்கி சேனைக்கான ஆட்களே இப்படி பரிசுத்த அடக்கம் அடைகிறார்கள்

முன்னறிவிக்கப்பட்ட வேதங்களின் படியாக கல்கி பூமிக்கு வானத்திலிருந்து இறங்கி வரும்முன்பே சமரச வேதாந்தி ஒருவர் வெளிப்படுவார் . இவரை  தனக்குப்பின் வருகிற தனித்தலைமைப்பதி என வள்ளலாரும் குறிப்பிட்டுள்ளார்

இவர் வடலூர் வந்து அங்கு அடக்கமாகியுள்ள கல்பட்டு அய்யா முதலானோரை பிரணவ தேகத்திலே உயிரோடு எழுப்பிக்காட்டினால் அவரே சமரச வேதாந்தி என அடையாளம் காட்டியுள்ளார்

வடலூரிலே மரித்தோரை எழுப்பிய பிறகு அவர் சாலைக்கும் வந்து சாலையார் உட்பட ஜீவ அடக்கம் ஆன அனைவரையும் எழுப்பி கல்கி சேனையை உருவாக்கி உலக நாடுகள் அனைத்தையும் சாட்டையாலேயே அடித்து அடக்கி ஒரே ராஜ்ஜியத்திற்குள் கொண்டுவருவார்

தர்மத்தை நிலைநாட்டும் இவர்களையே அய்யனார்  என தமிழர்கள் முன்னறிந்து ஊர் ஊருக்கு சிலை அமைத்து  வருவார்கள் வருவார்கள் என காத்திருக்கிறார்கள்

உலகை மூழ்கடிக்கும் ஆன்மீக பேரலை இந்தியாவிலிருந்து புறப்படும் என முன்னறிவித்த விவேகானந்தர் அவரை வெளிப்படுத்தும்படியாக கன்னியாகுமாரியில் வாலைத்தாயின்  காலடியில் தவம் இருந்தார் அல்லவா

நாஸ்ட்டர்டாம் தீர்க்கதரிசனமும் தமிழகத்தில் உதிக்கும் நபர் ஒருவர் இந்தியாவை ஆள்வார் ; அப்போது உலகை இந்தியா ஆளும் என குறிப்பிட்டுள்ளது

இந்த விபரம் நன்றாக தெரிந்த அசுர ஆவிகளும் தமிழகத்தை இந்தியாவோடு ஓட்ட விடாமல் பிரித்து விட காலம் காலமாக கங்கணம் கட்டிக்கொண்டு அண்ணா கருணாநிதி சீமான் போன்ற பொய்யர்களை உருவாக்கி வருகின்றன

அமெரிக்க சி ஐ ஏ வும் தமிழர்களை இந்தியாவோடு ஓட்ட விடாமல் இருக்க இத்தகைய நபர்களை ஊக்குவிக்கின்றன

கலியுகத்தில் அசுரர்களின் ஆதிக்கத்தில் உள்ள உலகமே கள்ளிக்காடு ஆகும் . அதில் வரப்போகிற சமரச வேதத்தை ஈசனின் பாதமே கொண்டுவந்து சேர்க்கும்

எது எப்படி ஆனாலும் இறைவனால் முன்குறிக்கப்பட்ட   அந்த நபரை இறைவா நாராயணன் நாமத்தாலும் சிவனின் நாமத்தாலும் விரைவில் அனுப்புவீராக என வேண்டிவருவது நம் கடமையாகும்

அவர் வரும்போது எல்லா மாய சக்திகளும் அடங்கும்

அவரே என் ஆத்மநேசர்   சகல முனிவர்களும் போற்ற பொற்சபையில் ஆனந்த நடமிடும் சிவனின் இடப்பாகம் வாழும் நங்கை குருகுலத்தின் சிறப்பு ஒங்க உலகிற்கு தரும் சற்குரு தனிகைமணிப்பிரான் அம்சமாக வரப்போகிறவர் அவரே

தேசிகன் என்பது முருகனையே குறிக்கும் . அந்த முருகன் தனிகைமணிப்பிரானாக ஒரு நபரைப்போல வந்து சாலையாரை தம்மோடு அழைத்து சென்று பல ஆண்டுகள் காடுகளிலும் மலைகளிலும் கடும் தவப்பயிற்சி மற்றும் ஞானபோதனை கொடுத்து ஆளாக்கினார்

நாயேன் என்னையும் பொன்னரங்கத்தான் என போற்றுமளவு உயர்த்தி வைத்த வள்ளல் திருவடிக்கமலம் வாழ்த்துகிறேன்


சற்குருவே ஏதேன உம்மைப்புகழுவேன்

கண்ணீர் மல்க தனிகை உம் பாதத்தில் விழுந்திருந்ததால் இந்த சுகம் எனக்கு விழைந்தது



இல்லம்


சாலை ஆண்டவர் அருளிய இல்லம் என்பதற்கான விளக்கம்

கண்ணால் காணும் நாற்றம் பிடித்த உடம்பிற்குள்ளே அழிவில்லாத உடம்பு உன் ஆத்மா என்றறிக

யுகம் யுகமாக எத்தனை பிறவி எடுத்தாயோ அத்தனை பிறவியிலும் நீயாகிய இல்லம் அது

அதுவே நீ படைக்கப்பட்டபோது ஆன்மா லயித்த ஆலயம் ஆகும்

இறைவனின் சாயலான மனித நற்குணங்கள் இருக்கும் மனையாகும்

உன்னுள் லயித்தால் உணரக்கூடிய மெய்ஞானம் இருந்த வீடு

ஆன்மாவில் லயித்து ஆலயம் ஆனால் இறைவனையே உன்னுள் காண்பாய்

ஆதியில் முதல் மனிதனாகிய சிவன் படைக்கப்பட்டபோது இறைவனுக்கு இணையானவன் (ஆதம் என்றால் இறைவனுக்கு இணையானவன் ) என்ற அழகு ஒளிரும் நாமம் உனக்கும் உண்டு

உடலெடுத்த பலன் ஒங்க ஜெனன பிணி நீங்க ஆத்மாவாகிய இல்லத்தை அறமுள்ளதாக ஆக்குவது இல்லறமாகும்



இல்லறம்







இல்லறம் அல்லாது நல்லறம் இல்லை என வேதவாக்கியங்கள் அனைத்தும் செப்புகின்றன 

ஆனாலும் நடைமுறையில் வீடு மனைவி மக்கள் என கவலைப்பட்டுஅலைந்து திரிந்து அல்லல்படுவதாகத்தானே இல்லறத்தார் உள்ளனர்

பின்னை ஏன் இல்லறமே நல்லறம் என்கின்றனர் ?

நீ இருக்கும் உன் சரீரமே உனக்கு இல்லமாகும்

உன் சரீரத்திற்குள்ளேயே  எல்லையற்ற இவ்வுலகமும் இருக்குது பாராய்

எது உன் ஆத்மாவில் அறிந்திருக்கப்பட்டிருக்கிறதோ அது மட்டுமே புற உலகில் உன்னால்  உணரப்படும்

ஆகவே எதை நீ வெளியே இருப்பதாக அறிகிராயோ அல்லது காண்கிறாயோ அவை அனைத்திற்கும் ஒருவித்து உனக்குள்ளே ஏற்கனவே வந்துவிட்டது என்பதை அறிக

உன்னுள் இல்லாத ஒன்றை அது வெளியே இருந்தாலும் உன்னால் உணரமுடியாது


அந்த வித்து ஒரு மானசீக கயிற்றின் மூலமாக வெளியே உள்ளதோடு ஏற்கனவே இணைக்கப்பட்டிருகிறது

அந்த வித்தை நீ கண்டறிந்து அதற்கு இறை ஆற்றலை பெற்று அதை பலப்படுத்தி பரிசுத்தப்படுத்துவாயானால் வெளியே உள்ளதும் இறை ஆற்றல் பெற்று பரிசுத்தமடையும்

இதுவே யோகியின் பார்வை வழிமுறை

அவன் வெளியே காணும் அனைத்து சீர்கேடுகளுக்கும் வெளியே உள்ளோரை குறை காண்பதில்லை

அவன் தனக்குள்ளாக மூழ்கி தன்னுள்ளே எதற்கு அருளாற்றலை பலப்படுத்த வேண்டுமோ அதற்கு இறை அருளை வேண்டி பரிசுத்தப்படுத்தி வெளியேஅதை பரப்பிவிடுகிறான்

அவைகள் நற்சீர் பெறுகின்றன

வெளியேஉன்னை சுற்றிய உலகம் மட்டுமல்ல அண்ட சராசரங்களும் மனித சரீரம் என்ற பிண்டத்திலே வித்தாக உள்ளன

அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்திலும் உள்ளது என்பது ஞானமொழி

இது ஒரு முக்கியமான சூத்திரம்

அண்டத்தில் எது சீர்படவேண்டுமென்று உணர்த்தப்படுகிறாயோ அல்லது விரும்புகிறாயோ அதற்காக கட்சி சேர்ப்பது வீண் பிரச்சாரம் செய்வது வீண்

அது உலகத்தாரின் செயல்

மெய்ஞான வழியோ உனக்குள்ளாக மூழ்கி அப்பிரச்சினைக்காக இறைவனிடம் ஊக்கமாக பிரார்த்தனை செய்க

அப்போது அது தொடர்பான வித்து உன் உள் உள்ளதே அது சீர்படத்தொடங்கியவுடன்  வெளியேயும் மாற்றம் உண்டாகும்

ஆகவேதான் சத்சம்பாசனை இடைவிடாத வேதவிசாரம் உண்ணுள்ளே செய்துகொண்டிரு என ஞானிகள் அனைவரும் வழிகாட்டினர்

சாலையார் சொல்கிறார் உன் உயிரைக்கொண்டு உன் ஆத்மாவிற்கு நல்லறம் செய்கிற வீடு உன் சரீரம்

இல்லறம்

உனக்குள்ளாக மூழ்கி உன் உயிராற்றலை பெருக்கி உன் ஆத்மாவை நிரப்பினால் அது பரிசுத்தமடையும் அதற்கு உன் உடலாகிய இல்லம் இருந்தால் மட்டுமே முடியும்

மனிதப்பிறவி எடுக்காமல் உன் ஆத்மாவிற்கு நீ நற்பேறு கிடைக்கச்செய்ய முடியாது அறம் செய்ய முடியாது

இப்பிறவியில் உன் சரீரமாகிய வீட்டில் அறம் செய்க

இதுவே இல்லறம்

யூத அரசன் டேவிட் மாபெரும் ஞானி கடவுளில் நிலைத்து  அவன் பாடிய பாடல்களில் அருளும் ஞானமும் நிறைந்து மணக்கும்

அவன் பாடிய 15௦  பாடல்களை ஜபூர் வேதம் என பின்னாளில் வந்த குர்ஆனில் இறைவன் சிறப்பித்து பேசியுள்ளார்

தாவீது பாடிய முதல் சங்கீதத்தின் வரிகள் இவைகள்

1. துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,

2. கடவுளுடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

3. அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.


மனிதர்கள் நாம் செய்வதெல்லாம் வாய்க்கவேண்டுமா  உலகில் பல நாடுகளில் பல்வேறு வேதங்களை இறைவன் பகுதி பகுதியாக இறை அடியவர்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார் இனிமேலும் வெளிப்படுத்துவார்

அந்த வேதங்கள் மறைநூல்கள்  எதையாவது இரவும் பகலும் உன் மனதில் அசை போட்டுக்கொண்டிரு

அவைகளை முதலாவது அறிந்துகொள்ள முயற்சி செய் காதுகொடுத்து கேட்டுக்கொள்

பின்பு உன் வாழ்வின் அனுபவத்தின் வழியாக அசை போடு

ஞானிகள் ஞானத்தை கேள்விஞானம் என்றுதானே சொன்னார்கள்

நீ நடந்து செல்ல்கிற பாதையில் உலகமும் அசுர ஆவிகளும் தீய விசயத்தை சிலர் பேசும்படி வைப்பார்கள் அது உன் காதில் விழும்

சமயமும் சந்தர்ப்பமும் உருவாக்கி ஒரு நாள் உனக்குள்ளிருந்து  நீயே அச்செயலை செய்யும்படியாக உன்னை ஊக்குவித்துவிடும்

அகவே தீயவற்றை கேட்காதே

அவைகள் உன் காதில் விழுகும் போது அங்கு நின்று பாராதே கிண்டலும் கேலியுமாக உட்கார்ந்து பேசாதே

இவைகள் உன்னிலிருந்து ஒரு நாள் நீ செய்ததாக வெளிப்படும்

இது ஆத்மாவின் இயல்பு

மனித ஆத்மா நல்ல சிறந்த பெரிய குப்பைத்தொட்டி

எந்த விசயத்தையும் எவ்வளவு விசயத்தையும் தன்னுள்ளே கொட்டிக்கொள்ளும் பாதுகாப்பாக வெளியே காட்டாமல் வைத்துக்கொள்ளும்

உனக்குள் என்ன இருக்கிறது என்று உனக்கே தெரியாது இறைவனுக்கும் அவரின் தேவ சக்திகளுக்கும் தெரிவதைப்போலவே அசுர சக்திகளுக்கும் நன்றாக தெரியும்

ஆகவேதான் ஒவ்வொரு மனிதன்  மூலமாகவும் குருஷேத்திரப்போர் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பூமியில் நடந்து வருகிறது என்கிறார் கிரிஷ்ணர்

நீ ஒரு யுத்த களம்

இதிலே உனக்கு நீ அறம் செய்ய கற்றுக்கொள்

ஊருக்கு உதவுவது இருக்கட்டும் உனக்கு நீயே  எப்படி உதவுவது என்பதை முதலாவது கற்றுக்கொள்

நான் பிறந்த மதத்தை காக்கிறேன் எம் கடவுளை காக்கிறேன் என்பது இருக்கட்டும் முதலாவது இன்னும் பாவத்தில் விழுகாதபடி சாபத்திற்காளாகதபடி உன்னை நீ காத்துக்கொள்

ஒவ்வொரு ஆத்மாவும் ஒவ்வொரு பிறவியிலும் பல நாடுகளில் பல மதங்களில் பிறந்து நன்மை தீமைகளை செய்து ஒன்று பாவத்தை கூட்டிக்கொள்கிறது அல்லது புண்ணியத்தை கூட்டிக்கொள்கிறது

நீ முழுமை அடைய விரும்பினால்

உறுப்படியாக உன்னை சூழ்ந்த சமுகத்திற்கு நன்மை செய்ய விரும்பினால்

முதலாவது உன் ஆத்மாவில் இடைவிடாது இறை ஆற்றலை பெருக்கு

உன் ஆத்மாவிற்கு அறம் செய்

இல்லறமே நல்லறம்

இல்லறமே நல்லறம்

உனக்குள்ளாக மூழ்கி இறைவனை சரணடைய கற்றுக்கொள்

நமோ நமஸ்கரிக்கிறோம் என்பதே மோன சபையாகும்

அப்போது உன் சூக்கும உடம்பு சுத்தமாகி வலிமையடையும்

அந்த சூக்கும உடம்பே உன் மனை மனைவி பிள்ளைகள் என்பதறிக

அவைகள் பலம் பெற்றால் வாலைக்கண்ணி  குண்டலினி வந்தேறி விளையாடும் சபையாக மாறுவாய்

முத்தராக சித்தராக உயர்வாய்

இல்லறத்தின் மேன்மைகள்



அருள் நிலையில் பாடப்படும் கவிதைகளை ஞானியர்கள் இன்றைய காதல்பித்து கவிஞர்களைப்போல உட்கார்ந்து எழுதி எழுதிப்பார்ப்பத்து எழுதுவதில்லை

அல்லது தயாரிப்பாளர் செலவில் லாட்ஜில் தண்ணியடித்துக்கொண்டு உளறி உளறி எழுதுவதுமில்லை

உள் உணர்வு மிகுந்தவுடன் பிரவாகமாக கொட்டிவிடுவார்கள்

அதில் ஆழமான அர்த்தமும் அருள்பொழிவும் மிக உயர்ந்த இலக்கணத்தோடு தானாக வரும் என்பதற்கு சாலையாரின் இக்கவியும் ஓர் உதாரணம்

அவர் எந்தக்கல்லுரியிலும் படித்ததில்லை அல்லது பாண்டிதர்களை அணுகி இலக்கணமும் கற்கவில்லை

இவ்வளவு சிக்கலான நடையை பெரும் தமிழ் பண்டிதர்களாலும் விளக்க முடியாது

சிலவேளைகளில் எளிமை என்பதைவிட கடுமையான நடையை ஞானியர்கள் பின்பற்றுவதற்கு காரணம் உண்டு

அதன் திறவுகோல் குருபக்தியின் சூட்சுமமாகும்

நிச்சயமாக அந்த சபைக்காரன் என அடையாளம் தரித்துக்கொள்வதைக்காட்டிலும் எப்ப பார்த்தாலும் ஆண்டவர் ஆண்டவர் இவர்தான் கடவுள் என செம்படிப்பதைக்காட்டிலும் உள்ளார்ந்த ஆத்மதாகம் உன்னதமான கடவுளை அடைவதற்கான அசராத தாகம் எதனுடனும் இதுதான் கடவுள் என மயங்கிநிற்காத தாகம் உள்ள நபரை குருமார்கள் ஆசையாக அரவணைப்பார்கள்

குருவைத்தேடுகிற சீடனாக இருப்பது என்பது அடித்தட்டு ஆன்மீிகம்

குரு தேடுகிற சீடனாக இருப்பது என்பது முன்னேறிய ஆன்மீிகம்

தன் பெருமை பேசித்திரிகிற மூட சீடர்களைக்காட்டிலும் தன் ஞானத்தை உள்வாங்கி வளர்த்தெடுக்கிற சீடனை குருவின் இதயம் தேடிக்கொண்டே இருக்கும்

தன்னை விட கடவுளை அடையும் தேடலுள்ள சீடனையே மெய்ஞானிகள் அதிகம் நேசிப்பார்கள்

அந்த உள்ளார்ந்த பக்தியோடு சாலையாரை அணுகினால் வள்ளல்பிரானின் அன்பைப்போல போல சாலையாரின் அன்பையும் பெறலாம்

இல்லறம் என்பது முதலாவது உன் ஆத்மா வாழும் வீடாகிய உன் சரீரத்தில் இறைவனின் அருள் பேறுகளை நிரப்புவது என்றார் சாலையார்

உயிரே கடவுள் என்ற உண்மைத்தத்துவத்தை தமிழகத்தில் விதைத்த ஞானி ஈஸ்வரபட்டரும் சப்த ரிஷிகளின் அருள்பேராற்றல் என்னை நிரப்ப அருள்வாய் ஈஸ்வரா துருவமகரிஷியின் அருள்சக்தி என்ன நிரப்ப அருள்வாய் ஈஸ்வரா என அனுதினமும் பிரார்த்தித்து ஏங்கும்படியாக வழிகாட்டியுள்ளார்

உன் சரீரமாகிய உடலுக்கு அறத்தை ஈவதே இல்லறம்






மனித சரீரத்தின் மேன்மை ஏதென்றால்

ஐந்து புலனறிவுடன் ஆறாவது பகுத்தறிவு என்னும் பகுத்து வகுத்து ஆய்ந்து அறியும் நுன்மான்நுழை புலம் மனித மூளைக்கு மட்டுமே உண்டு

எனக்கு விளங்கவில்லையே புரியவைப்பீராக என ஒரு விவரம் குறித்து மனிதன் தொடர்ந்து இறைவனிடம் வேண்டிவந்தால் அதுதொடர்பான நிகழ்வுகளால் நமக்கு அதை இறைவன் எடுத்துக்கொடுப்பார்

அந்த நிகழ்வுகளால் அனுபவங்களால் உனக்குள் பட்டறிவு விளக்கம் உண்டாகும்

உன் சொந்த ஐந்து புலன்களையும் அவற்றின் உணர்வுகளையும் அறிவையும் இந்த ஆறாவது அறிவு ஈர்த்து உள்புகுந்து ஆளும் காந்த வல்லமை உள்ளது

கிரகணம் என்றால் கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வருவதால் காந்தவிசை வலிமை பெற்று ஈர்க்கும்

ஆறாவது அறிவால் கட்டி இழுக்கப்பட்டு வழிநடக்கும் ஐந்து புலன்களையும் அறிவையும் பெருங்கிரண ஆறு புரி வடம் என்கிறார் சாலையார்

இந்த ஆறாவது அறிவின் மேன்மை என்னவென்றால் ஆறாவது அறிவு உள்ளோரால் மட்டுமே பிரார்த்தனை செய்யமுடியும்

விலங்குகள் பக்தி செய்வதில்லையா என்றால் : இல்லை

அவைகளின் இயல்புக்கத்தின் படியாக அவைகள் வாழ்ந்து மடிகின்றன

அவைகளுக்கு உள்ள அறிவுகளைக்கொண்டு அனுபவித்து மடிகின்றனவே தவிர அவைகள் எதையும் மேம்பாடு செய்து கொள்வதில்லை

பாவபுண்ணியமும் அவைகளுக்கு சேர்வதில்லை

சிலகாலம் அவைகள் அலைந்து திரிந்து அனுபவிக்கின்றனவே தவிர எந்த அறிவையும் ஞானத்தையும் மேம்பாடு செய்துகொள்வதில்லை

ஆனால் மனிதன் அப்படியில்லை


அனுதினமும் பாவமோ புண்ணியமோ அவனில் அதிகரிக்கின்றன


இன்பம் துன்பம் சஞ்சலம் சோர்வு ஏக்கம் என அவனை வாட்டிவதக்கி அவனுக்கு ஞானம் பட்டறிவு விளைகிறது


ஆகவேதான் அரிது அரிது மாநிடராகப்பிறப்பது அரிது என்றார்கள்


மனிதனானகப்பிறந்து விட்டாலே அவன் விசேசமானவன்தான்


கடவுளின் சாயலில் அவன் உள்ளான்


கடவுளைப்போலவே கொஞ்சம் படைப்பாற்றலும் அவனுக்கு உண்டு


என்றாவது ஒரு பிறவியில் கடவுளைப்போலவே முழுமையானவனாக வளர்ந்து அவன் பரலோகத்தில் பிரவேசிப்பது அவனுக்கு ஏற்கனவே வாக்களிக்கப்பட்டு விட்டது


எந்த மனிதனும் வாக்களிக்கப்பட்டவன் என்பதாலேயே எப்பேர்பட்ட கொடியவனும் திருந்தட்டும் என இறைவனிடம் நாம் வேண்டுதல் செய்யவேண்டியுள்ளது


முற்பிறவியில் இவனைப்போலவே நாமும் இருந்து இன்றைய முன்னேற்றத்தை அடைந்திருக்கிறோம் என்ற ஞானத்தால் யாரையும் தீர்க்காதிருக்கும் ஞானத்தை சற்குருநாதர்கள் நமக்கு உபதேசித்தார்கள்


அருங்கிரண ஈமானை ஈயும் காயமாகும்


மனித சரீரம் அருமையான பக்தி ஞான யோகத்தை வளர்க்கும் ஸ்தலமாகும்


சுக்லாம் பரதரும் விஷ்ணும் சசிவர்ணம் என்பதே பரிசுத்த தொடக்கம்


உன் உடல் அந்த பரிசுத்த தொடக்கத்தோடேயே பூமியில் வெளிப்பட்டுள்ளது


தத் சத் அது நீயாக இருக்கிறாய்


சகலமும் எதுவோ அது உனக்குள்ளும் இருக்கிறது


தத் சத் அது நீயாக இருக்கிறாய்


நீயே அது நீயே இறைவன் என உனக்கு சர்டிபிகேட் கொடுத்து ஞானத்தை விற்கும் சுயபெருமைக்காரர்களிடம் ஏமாறாதே


நீயே அதுவல்ல ; அது நீயாகவும் இருக்கிறது இன்னும் அநேகமாகவும் இருக்கிறது உனக்கு அடுத்தவராகவும் இருக்கிறது


நீ காண்கிற மனிதர்களெல்லாம் கடவுளின் சாயலில் உள்ளவர்கள்


கடவுளின் சொருபங்கள்


மனிதனை அவமதிப்பதும் கடவுளை அவமதிப்பதும் ஒன்று


கடவுளின் மீது பக்தி செலுத்துவது உண்மையானால் மனிதர்களை அவமதிக்க உன் உள்ளம் கூசும்


உன்னை நேசிப்பதுபோல உன் அயலானையும் நேசிப்பாயாக என்பதில் சகல வேதங்களின் சாரமும் இருக்கிறது என்றார் சற்குரு இயேசு


உனக்கு அயலானாக நடமாடும் கடவுளின் சாயலை மதிப்பதே பக்தி


கடவுளை நேசிக்கும் அன்பே மனித நேயமாக பரிணமிக்கும்


பக்தி இல்லாதவர்களின் மனிதநேய பகட்டு சுயபெருமை கூச்சல்


தங்களை பிறர் மதிக்கவேண்டும் என்பதற்காகவும் தங்களின் ஆதிக்கத்திற்காகவும் சுயநலவாதிகள் மனித நேயம் மனித நேயம் என பகட்டாக பேசுகிறார்கள்


கடவுளை நம்பாதவர்களின் மனித நேயம் சுயநலம் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது


ஓம் தத் சத்


ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம் அவன் நீயாகவும் இருக்கிறான் என்கிறான் மெய்ஞானி


ஓம் தத் சத்


ரஜோகுணம் ஆகிய சுயநலத்தில் இறைவனின் பேரருள் கலந்தால் அவன் அறிவு பறந்து விரிந்து சத்துவ குணமுள்ளவனாக மாறிவிடுவான்


ஆகவேதான் தன்னை நாடிவரும் சீடர்களுக்கு குருவானவர் பாலமாக இருந்து இறைவனின் நற்பேறுகளை வாரிவாரி வழங்குகிறார்


ரஜோகுணம் சத்வ குணமாக பரிமளிக்கும்


வருங்கிரண ஜோதிரஜோ தத்சத்தாகும்


விஸ்வாமித்ரர் அருளிய காயத்ரி மந்திரமே காயகல்ப மந்திரம் என்பார்கள்


ஓம் பூர் புவஸ்கக


பூர்வ புண்ணியங்கள் என்னை அபிசேகிக்கட்டும்


ஆதியில் நாமெல்லோரும் ஆதமும் அவரது முதுகெலும்பிற்குள் நாமும் அருள் நிலையிலேயே படைக்கப்பட்டோம்


ஆதி கிருத யுகத்தில் சிவனாரின் நேரடி வழிகாட்டலில் உலகம் முழுதும் நாமும் தர்மத்திலேயே நிலைத்திருந்தோம்


பிற்பாடே அசுர மாயைகளுக்கு ஆளானோம்


ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம் : அவர் பூர்வ புண்ணியங்களால் எண்ணை நிரப்பட்டும்


ஓம் பூர் புவஸ்கக


வளரமுதம் பிர்மா பூர்புவஸ் வரோமாகும்


அரும்பிரணவம் கலிமாவாகும்


ஓம் பிரணவத்தின் அர்த்தம் என்ன ?


அதுவா அதன் அர்த்தத்தை சிவனும் மறந்துவிட்டார் பிரம்மா முதலான தேவர்களும் மறந்துவிட்டார்கள்


அதை முருகன் ரகசியமாக சிவனின் காதில் ஓதினார் என சொல்வார்கள் ; இப்படி சொல்வதால் அதன் அர்த்தத்தையும் அறிந்துவிட்டதாக நம்பிக்கொள்கிறார்கள்


என்ன ஓதினார்


ஓம் ஓம் ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம் ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்


கலிமா


அவன் அளவற்ற அருளாளான் - அருட்பெருஞ்சோதி
நிகரற்ற அன்புடையோன் - தனிப்பெருங்கருணை


சாலையார் சொல்கிறார் அரும்பிரணவம் ஆகும் கலிமாவாகும்


கலிமாதான் பிரணவம் என்கிறார்


அவன் அளவற்ற அருளாளான்
நிகரற்ற அன்புடையோன் - கலிமா குர்ஆனில் வெளிப்படுத்தப்பட்டது


சைவ இசுலாமின் ஸ்தாபகரான வள்ளல்பிரான் சொல்கிறார் இப்போது இறைவன்


அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


என்ற மந்திரத்தை எடுத்துக்கொண்டார் என்கிறார்


இவை இரண்டும் சொல்லும் ஞானம் என்ன ஓரிறைவன்


ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம் என்பதே பிரணவம்


ஓம் நம் சிவாய என்பதே உன் இல்லம் சரீரமாகும் சிவனாக சரீரமாக வெளிப்பட்ட அந்த ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்


சிவன் சரீரத்தின் அதிபதி


கடவுளின் சாயலில் முதல்முதலில் வெளிப்படுத்தப்பட்ட மனிதன் சிவன் ஆதம்


சிவனின் நாமத்தினாலே ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம் என்பதும் என் சரீரத்தின் மூலமாக இறைவனை நமஸ்கரிக்கிறேன் என்பதும் ஒன்று


ஐந்தெழுத்து மந்திரம் உன் இல்லம் சரீரமேயாகும்


எட்டெழுத்து மந்திரம் ஓம் நமோ நாராயணாய

நாராயணனாக வெளிப்பட்ட அந்த ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்

இறைவன் சகலவற்றையும் ஏதோ ஒன்றை கொண்டுதானே படைத்திருக்க வேண்டும்

அந்த மூலப்பொருள் பரமாத்மா நாராயணன்

அந்த நாராயணன் மூலமாக இறைவனை வழிபடுவதும் உன் ஆத்மாவின் மூலமாக இறைவனை வழிபடுவதும் ஒன்று

சற்குரு இயேசு சொன்னார் : இறைவனை அந்த கோயிலில் தொழுதுகொள்ள வேண்டும் இந்த பள்ளிவாயிலில் தொழுதுகொள்ள வேண்டும் என இதுவரை சொல்லப்பட்டது வந்தது .அதன் தரம் உயர்ந்துவிட்டது

21. அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.

23. உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.

24. தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.


தேவன் கடவுள் ஆவியாக இருக்கிறார் முற்றுயிராக இருக்கிறார்

வெட்டவெளியே பிரபஞ்சத்தை விட பல மடங்கு பெரியது . பிரபஞ்சம் நாராயணன் பரமாத்மா என்றால் அது தங்கி வளர்வது எதில் என்றால் வெட்டவெளியில் அந்த வெட்டவெளியில் ஈதர் என்றொரு ஆவி இருப்பதாக சொல்கிறார்கள்

அந்த ஆவியே இறைவன் நாராயணனாக வெளிப்பட்டு அதில் தனது சாயலாக சிவனை வெளிப்படுத்தினார்

சைவர்கள் இதில் சண்டைக்கு வரவேண்டியதில்லை

நாராயணனுக்குள் சிவன் படைக்கப்பட்டாலும் நாராயணனை விட பெரியவரான இறைவனின் சாயலில் சிவன் படைக்கப்பட்டார் என்பது விசேஷமானது

அதனால் அவரை உடனடியாக அங்கீகரித்து தனது அம்சமான நாராயணியை அவருக்கு மனைவியாக்கி நாராயணன் அங்கீகரித்து விட்டார்

தேவர்கள் அசுரர்கள் என்ற பிரிவினை பரமண்டலத்தில் உண்டானதே சிவன் என்ற ஆதமின் படைப்பினால்தான் என்றே குரானும் பைபிளும் சொல்கின்றன

தேவர்களில் யார் சிவனை அங்கீகரிக்காதவர்களோ அவர்களே அசுரர்களாகி இறைவனோடு சண்டை போடுகிறவர்களாக மாறினார்கள் 


இங்கு இயேசு சொல்கிறார் இறைவன் முற்றுயிராக உள்ளார்

அவரைத்தொழுதுகொள்கிரவர்கள் ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள வேண்டும்

மனிதனுக்கு ஆவி அவனுக்குள் ஓடும் உயிர்

உண்மை எது

உன் சரீரமும் அதற்குள் இருக்கும் உன் ஆத்மாவுமே உண்மை

எது உண்மை

உனக்கு எது தெரிந்திருக்கிறதோ அதுவே உன்னைப்பொறுத்த அளவில் உண்மை

அது உன் ஆத்மாவில் அறிவாக அனுபவமாக ஞானமாக பொதிந்து உன் சரீரத்தைப்போன்ற சூக்கும சரீரமாக இருக்கிறது

அழிவில்லாத உன் ஆத்மாவே உண்மை

அந்த சூக்கும சரீரத்தை ஒளி சரீரமாக வளர்த்துக்கொண்டால் பிறகு உனக்கு அழியக்கூடிய ஸ்துல சரீரம் தேவைப்படாது இதுவே மரணமில்லா பெரு வாழ்வு பரலோகத்தில் நுழைந்து தேவராக வாழத்தொடங்கி விடுவோம்

எப்படியாயினும் ஆத்மாவும் சரீரமும் இருந்தால் மட்டுமே நீ மெய்

இல்லாவிட்டால் நீ பொய் 

இருப்பாய் ஆனால் இல்லாதவனைப்போல செயல்படாமல் இருப்பாய்

ஆவியோடும் மெய்யோடும் நீ இறைவனைத்தொழுதுகொள்ளவேண்டும் என்பதே இயேசுவின் உபதேசம்

மொழிபெயர்த்தவர்கள் உணமையோடு என மொழிபெயர்த்துவிட்டார்கள்

ஆவி அருபமாக இருக்கிறது

ஆத்மாவும் சரீரமும் மெய்யாக இருக்கிறது அதாவது உனக்குள் உள்ள சிவனின் அம்சமும் நாராயணனின் அம்சமும் சேர்ந்தால் மட்டுமே மெய்

அந்த மெய்யைக்கொண்டு ஆவியாகிய இறைவனில் நீ நிலைத்திருந்தால் அதுவே யோகம் அதுவே அருள் வாழ்வு அதுவே ஈமான்

அண்டத்தில் உள்ளது எதுவோ அதுவெல்லாம் உன் பிண்டத்திலும் இருக்கிறது என்பதே மனிதபிறப்பின் சிறப்பு

பிண்டத்தில் சரீரத்தையும் ஆத்மாவையும் பயன்படுத்தி உன் உயிரில் நிலைத்து தியானம் செய்யவேண்டும்

அதைப்போல அண்டத்தில் அதிதேவர்கள் நாராயணன் மூலமாகவும் சிவனின் மூலமாகவும் முற்றுயிரான இறைவனை அதாவது அல்லாவை வழிபடவேண்டும்

அல்லாவே நாராயணனாகவும் சிவனாகவும் வெளிப்பட்டு அவர்கள் மூலமாகவே சகலத்தையும் நிர்வாகம் செய்கிறார்

அவர்களை விட்டுவிட்டு அல்லா நேரடியாக எதையும் செய்வதில்லை

அல்லா எதைச்செய்தாலும் காப்ரியேல் மைக்கேல் என்ற அதிதேவர்கள் மூலமாகவே செய்கிறார் என்பதை குரானிலும் பைபிளிலும் காணலாம்

ஆகவே பிரார்த்தனையில் நாராயணன் நாமத்தாலும் சிவனின் நாமத்தாலும் இறைவா அல்லாஹ் என வழிபடுவதே மிக மிக சரியானது

கலியுகத்தில் மாச்சரியங்கள் இருக்கட்டும் என்பதால் இந்த ஞானம் வெளிப்படாமல் தனித்தனியாக அல்லாவுக்கு ஒரு மார்க்கமும் நாராயணனுக்கு ஒரு மார்க்கமும் சிவனுக்கு ஒரு மார்க்கமும் போல வேறுவேறுபோல வெளிப்பட்டு சண்டை செய்துகொண்டுள்ளனர் மனிதர்கள்

வரப்போகிற சமரச வேதமோ இவைகளை சமரசப்படுத்துவதுடன் இயற்கை விளக்கமான அத்வைதத்துடனும் சமரசப்படுத்திவிடும்

உள்முக தியானத்தையும் வெளிமுக பிரார்த்தனையையும் நல்லிணக்கப்படுத்தி வழிநடத்தும்

ஆறு சுவையான மார்க்கங்களை சமரசப்படுத்தும் சமரச சத்திய சன்மார்க்கம் அகாரமாகிய ஆதி இறைவனை நோக்கிய மார்க்கமாக விளையும்

அப்போது 
தலைமைப்பதி &
 தனிதலைமைப்பதி உலகைவழிநடத்த வருவார்கள் 

தலைமைப்பதி என்றால் பரமாத்மா ஈசாநபி

தனி தலைமைப்பதி என்றால் முகமதுநபி

தனி அலுவலர் என்றால் அரசனுக்காக செயல்படுபவர் சுயமாக எதையும் செய்யமாட்டார்

மேலே கேட்டுத்தான் எதையும் செய்வார்

தனித்தலைமைப்பதி என்றால் இறைவனுக்காக பூமியில் செயல்படும் இறைதூதர் நபி என்றே அர்த்தமாகும்

சாலையாரின் வார்த்தைகளை கவணியுங்கள் சிந்தையற்ற

சுயமாக எதையு செய்யாமல் இறைவன் சொல்வதை மட்டும் பூமியில் செய்பவர் நபி

கலியுக முடிவிலே சமரச வேதாந்தி ஒருவர் வருவார் என எல்லா மதங்களிலும் உள்ளது

உன் மெய்யாகிய வீட்டிலே உயிராகிய இறைவனில் நீ நிலைத்து நின்று தியானித்து வந்தாலும் நாராயணன் நாமத்தாலும் சிவனின் நாமத்தாலும் இறைவா என வழிபாட்டு வந்தாலும் இந்த மேன்னை யாவற்றையும் நீ அடைவாய்




இல்லறத்தில் முக்தி பெற்றால் கிரகஸ்தனாகலாம்

உன் சரீரத்திற்கும் அதில் வாழும் உன் ஆத்மாவிற்கும் அனுதினமும் இறைவனின் நற்பேறுகளை நிரப்பிவருவது இல்லறம் என்றால் அதில் பழுத்து கொட்டை போட்டால் நீ கிரகஸ்தனாகலாம்

இறைவனின் அருள்பேறுகள் உன்னுள் பெருகி பாவபுண்ணியங்கள் சமப்பட்டால் ; பரிசுத்தம் மேல் பரிசுத்தம் அடைந்தால் கிரகங்கள் உன்னிடம் வேலை செய்யாது என்கிறார் சாலையார்

கிரகங்கள் வேலை செய்யாத அளவு உனது பாவபுண்ணியங்கள் அஸ்தமனம் அடைந்தால் நீ கிரக + அஸ்தன் = 
கிரகஸ்தன் 

ஒரு மனிதனின் ஆத்மாவில் பாவபுண்ணியங்கள் எவை எவை உள்ளனவோ அவைகளை தமது சஞ்சாரத்தால் உண்டாகும் ஒளி அலைகள் மூலமாக கிரகங்கள் தூண்டி விடுகின்றன

பக்தி யோகா மார்க்கங்களில் அப்பியாசித்து வரும் சாதகர்கள் எவ்வளவுக்கெவ்வளவு அருள் பேறுகளை பெருக்கி கொள்கிறீர்களோ அவ்வளவு  ஆத்ம உள்ளொளி கிரகங்களின் ஒளி அலைகளை குணம் மாற்றி விடும்

ஆகவே கிரகம் உங்களிடம் வேலை செய்யாது

இல்லறத்தின் முக்தி நிலை இதுவே


காப்பு பாடல்

அமுத கலைஞானம் என்பது மகா குரு சாலை ஆண்டவரால் இயற்றப்பட்டது கவிகளாக கேள்வி பதிலா போல அற்புதமாக நமது பாராம்பரிய வேத ஞானங்களை சொல...