கசாயம் காவி கட்டிக்கொண்டு விரதம் இருப்பதாக காட்டிக்கொள்வது சந்நியாசமல்ல
தாடி ஜடாமுடி தண்டு கமண்டலம் இத்யாதி தாவடங்கள் சந்நியாசமுமல்ல
உன்னால் காணமுடியாத உன் ஆத்மாவை உன் அம்சமாக வெளியே தோன்றும் மனைவி மக்களை வைத்து நீ எப்பேர்ப்பட்டவன் என்பதை அறிந்துகொள்ளலாம் உலகமும் அறிந்துகொள்ளும்
அவர்களை நீயும் தேற்றுவாய் அவர்களும் உன்னை தேற்றுவார்கள்
அப்பேர்ப்பட்டவர்களை தவிக்க விட்டு காடு மலை என அலைந்து தவிப்பதல்ல சந்நியாசம்
உலகத்திற்கு மாறுபாடான கொலை கொள்ளைகளை செய்துவிட்டு வாரண்டுக்கு தப்பி ஒளிந்து திரிந்து வாழ்வதைப்போன்றதல்ல சந்நியாசம்
சேற்றில் உருவாகும் பூச்சி அந்த சேற்றால் அழியாத
தன்மை பெற்று சேற்றிலே வாழ்வதைப்போன்று சேற்றிலே முழைத்த செந்தாமரையாக சேற்றிலே
பட்டும்படாமலும் இந்த உலகத்தில் வாழ்வதே சந்நியாசமாகும்
உலகத்தில் மானிட சரீரத்தில் பிறக்காமல் நாம்
சித்தி அடையவே முடியாது
எவ்வளவுக்கெவ்வளவு கேடுகளின் இருப்பிடமாக மனித சரீரம் இருந்தாலும் சேற்றிலேமுழைக்கும் செந்தாமரை மனம்வீசுவதைப்போல பட்டறிவால் மனிதனுக்கு உண்டாகும் ஞானம் அவனை இறைவனை நோக்கி வளரச்செய்கிறது
எப்பிறவியிலேனும் ஒரு நாள் அவன் முழுமையடைந்து இறைவனை கிட்டிச்சேர மனிதனுக்கு வாக்களிக்கப்பட்டுவிட்டது
இறைவனை நோக்கிய எண்ணம் வந்ததும் பிரார்த்தனை தியானம் தவம் யோகம் என கலைகள் அவனிடத்து வளர தொடங்கும்

யோகம் என்றாலே கூடியிருத்தல் என்றே பொருளாகும்
மனதை வெளியே அலையவிடாமல் உள்முகமாகத்திரும்பி
விடுதலே தியானமாகும்
அப்போது அவன் மனது ஆத்மாவில் நிலைத்து தான் சரீரமல்ல என்ற விடுதலையை உணரத்தொடங்குவான்
இன்னும் இன்னும் உள்முகமாகத்திரும்பினால் உயிரில் நிலைத்து மனதின் அலைவுகளிளிருந்தும் விடுபடுவான்

உள்முகமாகத்திரும்பி உயிரில் நிலைத்தவனிடம் மனம்
அலைவுறாது உயிரிலும் இறைவனிடமும் நிலைத்த தன்மை உண்டாகும்
ஆதியில் அந்தர்யோகம் என்றே சொன்னார்கள்
சாதகன் யோகத்தில் அப்பியாசிக்க அப்பியாசிக்க சகஜ யோகம் கைகூடும்போது நிலைத்த மனதுடையவனாக சகஜ யோகம் என்ற நிலைக்கு வருவான்
சகஜ யோகம் உள்விளையவேண்டும்
ஆகவேதான் சாலையார் சதா ஞான உபநிடதம் உன்னுள் தீட்சையாகவேண்டும் என்கிறார்

எளியமுறை குண்டலினி யோகம் வாசி யோகம் கடயோகம்
போன்றவை எவ்வளவுதான் பிறரால் உனக்கு பயிற்சி அழித்தாலும் தொட்டு தொட்டு
பார்ப்பதைபோலத்தன் உதவுமேதவிர முன்னேற்றம் எதுவும் இருக்காது
உன் முயற்சியாலும் இறைவனின் கிருபையாலும் உனக்குள் தீட்சையாகவேண்டும்

சாலையார் பொன்னரங்க தேவாலயத்தில் தொழுகைக்கு
மட்டுமே அனுமதி கொடுத்திருப்பது குருவின் மூலமாக இறைவனின் அருளை பெற்றுக்கொண்டு
தனித்து உள்முகமாகத்திரும்பி உனக்கு நீயே தீட்சையாக்கிக்கொள்ள வேண்டும்
ஆகவேதான் பொன்னரங்க தேவாலயம் அருகிலேயே தனியாக தவமாளிகை அமைத்து அவர் தவம் செய்து வந்தார் அடுத்தவருக்கும் சுட்டிக்காட்டினார்
சாலையாரின் ஆவிமண்டல குருபிரான் அவரை 12 ஆண்டுகள் திருப்பரங்குன்றம் மலைக்குகையில் தவம் பயில வைத்தார்
அதுபோல குருவின் மூலமாக இறைவனின் அருளை அளவில்லாமல் பெற்றுக்கொண்டு நாம்தான் தனித்து தியானம் தவம் செய்துகொள்ள வேண்டும்
அவ்வாறு உள்முகப்பயணம் செய்யும்போது இச்சைகள் அடங்கும் . மனித இச்சைகள் இச்சா சக்தியானது யாரும் எதிரில் நின்று வா என அழைக்காமலேயே தன்னிச்சையாக பாயக்கூடியது

எந்தெந்த வீதியின் வழியாக இச்சா சக்தி பாய்கிறதோ
அங்கெல்லாம் எப்படி தாளிடுவது என்பதை நீ கற்றுக்கொள்ளவேண்டும்
அவ்வாறு உன் ஞானத்தால் நீ தாளிட்டுக்கொண்டால் கள்ளப்புலனைந்தும் காண்டாமணி விளக்காக மாறி உன் சரீரத்தில் அமுதம் விளையும்
உன் கவணம் உலகத்தில் சிதறி போய்க்கொண்டிருக்கும்வரை நீ சிவா சரீரமாக இருக்கிறாய்
உன் புலன்கள் உலகத்திலிருந்து விடுபட்டு உள்முகமாக உன் உயிரை நோக்கி திரும்பிவிட்டாலோ சிவா வாசி யாக மாறிவிடுகிறது
இதுவே வாசியோகத்தின் சூக்குமம்
வடிவமைக்கப்பட்ட பயிற்சியால் பெரிதாக நீ எதையும் அடையமுடியாது
தொழுகை பிரார்த்தனை மூலமாக குருவருளையும் இறைவனின் திருவருளையும் பெற்றுக்கொண்டு தனித்து உள்முகமாகத்திரும்பி விடு
உலகத்திலிருந்து எவ்வளவுக்கெவ்வளவு தாளிட்டுக்கொல்கிராயோ அவ்வளவுக்கவ்வளவு வாசி மேலேறி துரியத்தை அடையும் அமிழ்தம் உன் சரீரத்தில் விளையும்
அதை உச்சத்தலையில் சமமமாக நிறுத்திக்கொண்டு மகாமந்திரத்தை உள்ளனுபவமாக உணர்ந்து தெளிந்தாயானால் சந்நியாசம் உன்னில் ஊற்றெடுக்கும்
ஆதியில் வெளிப்பட்ட மகாமந்திரங்கள் இரண்டு
ஓம் நமோ சிவாய பஞ்சாட்சாரம்
வெளியே ஜடப்பொருளாகவும் என்னிடத்து சரீரமாகவும் பிரத்தட்சியமாகியுள்ள சிவனாக வெளிப்பட்ட அந்த ஓர் இறைவனையே நமஸ்கரிக்கிறேன்

ஓம் நமோ நாராயணாய அஸ்டாங்க மந்திரம்
வெளியே பிரபஞ்சமாகவும் என்னிடத்து ஆத்மாகவும் பிரத்தட்சியமாகியுள்ள நாராயணனாக வெளிப்பட்ட அந்த ஓர் இறைவனையே நமஸ்கரிக்கிறேன்

அடுத்து வெளிப்பட்ட மகாமந்திரம் கலிமா
அவன் அளவற்ற அருளாளன்
நிகரற்ற அன்புடையோன்
சைவ இசுலாமான வள்ளலாரியமும் இதே கலிமாவை
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி என்கிறது
வெளியே முற்றுயிராகவும் என்னிடத்து உயிராகவும் பிரத்தட்சியமாகியுள்ள (அருப இறைவனை)அந்த ஓர் இறைவனையே நமஸ்கரிக்கிறேன்
இம்மூன்று மந்திரங்களே மகாமந்திரங்கலாகும்
உன் உச்சந்தலையில் துரியத்தில் வாசியை நிலைநிருத்தி உன் சரீரத்தையும் ஆத்மாவையும் உயிரையும் உணர்ந்து தெளிந்தாயானால் சந்நியாச நிலை உன்னில் முகிழ்க்கும்

No comments:
Post a Comment