இல்லறம் அல்லாது நல்லறம் இல்லை என வேதவாக்கியங்கள் அனைத்தும் செப்புகின்றன
ஆனாலும் நடைமுறையில் வீடு மனைவி மக்கள் என கவலைப்பட்டுஅலைந்து திரிந்து அல்லல்படுவதாகத்தானே இல்லறத்தார் உள்ளனர்
பின்னை ஏன் இல்லறமே நல்லறம் என்கின்றனர் ?
நீ இருக்கும் உன் சரீரமே உனக்கு இல்லமாகும்
உன் சரீரத்திற்குள்ளேயே எல்லையற்ற இவ்வுலகமும் இருக்குது பாராய்
எது உன் ஆத்மாவில் அறிந்திருக்கப்பட்டிருக்கிறதோ அது மட்டுமே புற உலகில் உன்னால் உணரப்படும்
ஆகவே எதை நீ வெளியே இருப்பதாக அறிகிராயோ அல்லது காண்கிறாயோ அவை அனைத்திற்கும் ஒருவித்து உனக்குள்ளே ஏற்கனவே வந்துவிட்டது என்பதை அறிக
உன்னுள் இல்லாத ஒன்றை அது வெளியே இருந்தாலும் உன்னால் உணரமுடியாது
அந்த வித்து ஒரு மானசீக கயிற்றின் மூலமாக வெளியே உள்ளதோடு ஏற்கனவே இணைக்கப்பட்டிருகிறது
அந்த வித்தை நீ கண்டறிந்து அதற்கு இறை ஆற்றலை பெற்று அதை பலப்படுத்தி பரிசுத்தப்படுத்துவாயானால் வெளியே உள்ளதும் இறை ஆற்றல் பெற்று பரிசுத்தமடையும்
இதுவே யோகியின் பார்வை வழிமுறை
அவன் வெளியே காணும் அனைத்து சீர்கேடுகளுக்கும் வெளியே உள்ளோரை குறை காண்பதில்லை
அவன் தனக்குள்ளாக மூழ்கி தன்னுள்ளே எதற்கு அருளாற்றலை பலப்படுத்த வேண்டுமோ அதற்கு இறை அருளை வேண்டி பரிசுத்தப்படுத்தி வெளியேஅதை பரப்பிவிடுகிறான்
அவைகள் நற்சீர் பெறுகின்றன
வெளியேஉன்னை சுற்றிய உலகம் மட்டுமல்ல அண்ட சராசரங்களும் மனித சரீரம் என்ற பிண்டத்திலே வித்தாக உள்ளன
அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்திலும் உள்ளது என்பது ஞானமொழி
இது ஒரு முக்கியமான சூத்திரம்
அண்டத்தில் எது சீர்படவேண்டுமென்று உணர்த்தப்படுகிறாயோ அல்லது விரும்புகிறாயோ அதற்காக கட்சி சேர்ப்பது வீண் பிரச்சாரம் செய்வது வீண்
அது உலகத்தாரின் செயல்
மெய்ஞான வழியோ உனக்குள்ளாக மூழ்கி அப்பிரச்சினைக்காக இறைவனிடம் ஊக்கமாக பிரார்த்தனை செய்க
அப்போது அது தொடர்பான வித்து உன் உள் உள்ளதே அது சீர்படத்தொடங்கியவுடன் வெளியேயும் மாற்றம் உண்டாகும்
ஆகவேதான் சத்சம்பாசனை இடைவிடாத வேதவிசாரம் உண்ணுள்ளே செய்துகொண்டிரு என ஞானிகள் அனைவரும் வழிகாட்டினர்
சாலையார் சொல்கிறார் உன் உயிரைக்கொண்டு உன் ஆத்மாவிற்கு நல்லறம் செய்கிற வீடு உன் சரீரம்
இல்லறம்
உனக்குள்ளாக மூழ்கி உன் உயிராற்றலை பெருக்கி உன் ஆத்மாவை நிரப்பினால் அது பரிசுத்தமடையும் அதற்கு உன் உடலாகிய இல்லம் இருந்தால் மட்டுமே முடியும்
மனிதப்பிறவி எடுக்காமல் உன் ஆத்மாவிற்கு நீ நற்பேறு கிடைக்கச்செய்ய முடியாது அறம் செய்ய முடியாது
இப்பிறவியில் உன் சரீரமாகிய வீட்டில் அறம் செய்க
இதுவே இல்லறம்
யூத அரசன் டேவிட் மாபெரும் ஞானி கடவுளில் நிலைத்து அவன் பாடிய பாடல்களில் அருளும் ஞானமும் நிறைந்து மணக்கும்
அவன் பாடிய 15௦ பாடல்களை ஜபூர் வேதம் என பின்னாளில் வந்த குர்ஆனில் இறைவன் சிறப்பித்து பேசியுள்ளார்
தாவீது பாடிய முதல் சங்கீதத்தின் வரிகள் இவைகள்
1. துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
2. கடவுளுடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
3. அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
மனிதர்கள் நாம் செய்வதெல்லாம் வாய்க்கவேண்டுமா உலகில் பல நாடுகளில் பல்வேறு வேதங்களை இறைவன் பகுதி பகுதியாக இறை அடியவர்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார் இனிமேலும் வெளிப்படுத்துவார்
அந்த வேதங்கள் மறைநூல்கள் எதையாவது இரவும் பகலும் உன் மனதில் அசை போட்டுக்கொண்டிரு
அவைகளை முதலாவது அறிந்துகொள்ள முயற்சி செய் காதுகொடுத்து கேட்டுக்கொள்
பின்பு உன் வாழ்வின் அனுபவத்தின் வழியாக அசை போடு
ஞானிகள் ஞானத்தை கேள்விஞானம் என்றுதானே சொன்னார்கள்
நீ நடந்து செல்ல்கிற பாதையில் உலகமும் அசுர ஆவிகளும் தீய விசயத்தை சிலர் பேசும்படி வைப்பார்கள் அது உன் காதில் விழும்
சமயமும் சந்தர்ப்பமும் உருவாக்கி ஒரு நாள் உனக்குள்ளிருந்து நீயே அச்செயலை செய்யும்படியாக உன்னை ஊக்குவித்துவிடும்
அகவே தீயவற்றை கேட்காதே
அவைகள் உன் காதில் விழுகும் போது அங்கு நின்று பாராதே கிண்டலும் கேலியுமாக உட்கார்ந்து பேசாதே
இவைகள் உன்னிலிருந்து ஒரு நாள் நீ செய்ததாக வெளிப்படும்
இது ஆத்மாவின் இயல்பு
மனித ஆத்மா நல்ல சிறந்த பெரிய குப்பைத்தொட்டி
எந்த விசயத்தையும் எவ்வளவு விசயத்தையும் தன்னுள்ளே கொட்டிக்கொள்ளும் பாதுகாப்பாக வெளியே காட்டாமல் வைத்துக்கொள்ளும்
உனக்குள் என்ன இருக்கிறது என்று உனக்கே தெரியாது இறைவனுக்கும் அவரின் தேவ சக்திகளுக்கும் தெரிவதைப்போலவே அசுர சக்திகளுக்கும் நன்றாக தெரியும்
ஆகவேதான் ஒவ்வொரு மனிதன் மூலமாகவும் குருஷேத்திரப்போர் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பூமியில் நடந்து வருகிறது என்கிறார் கிரிஷ்ணர்
நீ ஒரு யுத்த களம்
இதிலே உனக்கு நீ அறம் செய்ய கற்றுக்கொள்
ஊருக்கு உதவுவது இருக்கட்டும் உனக்கு நீயே எப்படி உதவுவது என்பதை முதலாவது கற்றுக்கொள்
நான் பிறந்த மதத்தை காக்கிறேன் எம் கடவுளை காக்கிறேன் என்பது இருக்கட்டும் முதலாவது இன்னும் பாவத்தில் விழுகாதபடி சாபத்திற்காளாகதபடி உன்னை நீ காத்துக்கொள்
ஒவ்வொரு ஆத்மாவும் ஒவ்வொரு பிறவியிலும் பல நாடுகளில் பல மதங்களில் பிறந்து நன்மை தீமைகளை செய்து ஒன்று பாவத்தை கூட்டிக்கொள்கிறது அல்லது புண்ணியத்தை கூட்டிக்கொள்கிறது
நீ முழுமை அடைய விரும்பினால்
உறுப்படியாக உன்னை சூழ்ந்த சமுகத்திற்கு நன்மை செய்ய விரும்பினால்
முதலாவது உன் ஆத்மாவில் இடைவிடாது இறை ஆற்றலை பெருக்கு
உன் ஆத்மாவிற்கு அறம் செய்
இல்லறமே நல்லறம்
இல்லறமே நல்லறம்
உனக்குள்ளாக மூழ்கி இறைவனை சரணடைய கற்றுக்கொள்
நமோ நமஸ்கரிக்கிறோம் என்பதே மோன சபையாகும்
அப்போது உன் சூக்கும உடம்பு சுத்தமாகி வலிமையடையும்
அந்த சூக்கும உடம்பே உன் மனை மனைவி பிள்ளைகள் என்பதறிக
அவைகள் பலம் பெற்றால் வாலைக்கண்ணி குண்டலினி வந்தேறி விளையாடும் சபையாக மாறுவாய்
முத்தராக சித்தராக உயர்வாய்


No comments:
Post a Comment