Total Pageviews

Saturday, June 3, 2017

சந்நியாசி யார்









கசாயம் காவி கட்டிக்கொண்டு விரதம் இருப்பதாக காட்டிக்கொள்வது சந்நியாசமல்ல

தாடி ஜடாமுடி தண்டு கமண்டலம் இத்யாதி தாவடங்கள் சந்நியாசமுமல்ல

உன்னால் காணமுடியாத உன் ஆத்மாவை உன் அம்சமாக வெளியே தோன்றும் மனைவி மக்களை வைத்து நீ எப்பேர்ப்பட்டவன் என்பதை அறிந்துகொள்ளலாம் உலகமும் அறிந்துகொள்ளும்

அவர்களை நீயும் தேற்றுவாய் அவர்களும் உன்னை தேற்றுவார்கள்

அப்பேர்ப்பட்டவர்களை தவிக்க விட்டு காடு மலை என அலைந்து தவிப்பதல்ல சந்நியாசம்

உலகத்திற்கு மாறுபாடான கொலை கொள்ளைகளை செய்துவிட்டு வாரண்டுக்கு தப்பி ஒளிந்து திரிந்து வாழ்வதைப்போன்றதல்ல சந்நியாசம்
சேற்றில் உருவாகும் பூச்சி அந்த சேற்றால் அழியாத தன்மை பெற்று சேற்றிலே வாழ்வதைப்போன்று  சேற்றிலே முழைத்த செந்தாமரையாக சேற்றிலே பட்டும்படாமலும் இந்த உலகத்தில் வாழ்வதே சந்நியாசமாகும்
உலகத்தில் மானிட சரீரத்தில் பிறக்காமல் நாம் சித்தி அடையவே முடியாது

எவ்வளவுக்கெவ்வளவு கேடுகளின் இருப்பிடமாக மனித சரீரம் இருந்தாலும் சேற்றிலேமுழைக்கும் செந்தாமரை மனம்வீசுவதைப்போல பட்டறிவால் மனிதனுக்கு உண்டாகும் ஞானம் அவனை இறைவனை நோக்கி வளரச்செய்கிறது

எப்பிறவியிலேனும் ஒரு நாள் அவன் முழுமையடைந்து இறைவனை கிட்டிச்சேர மனிதனுக்கு வாக்களிக்கப்பட்டுவிட்டது

இறைவனை நோக்கிய எண்ணம் வந்ததும் பிரார்த்தனை தியானம் தவம் யோகம் என கலைகள் அவனிடத்து வளர தொடங்கும் 

யோகம் என்றாலே கூடியிருத்தல் என்றே பொருளாகும்
மனதை வெளியே அலையவிடாமல் உள்முகமாகத்திரும்பி விடுதலே தியானமாகும்

அப்போது அவன் மனது ஆத்மாவில் நிலைத்து தான் சரீரமல்ல என்ற விடுதலையை உணரத்தொடங்குவான்

இன்னும் இன்னும் உள்முகமாகத்திரும்பினால் உயிரில் நிலைத்து மனதின் அலைவுகளிளிருந்தும் விடுபடுவான்

உள்முகமாகத்திரும்பி உயிரில் நிலைத்தவனிடம் மனம் அலைவுறாது உயிரிலும் இறைவனிடமும் நிலைத்த தன்மை உண்டாகும் 

ஆதியில் அந்தர்யோகம் என்றே சொன்னார்கள்

சாதகன் யோகத்தில் அப்பியாசிக்க அப்பியாசிக்க சகஜ யோகம் கைகூடும்போது நிலைத்த மனதுடையவனாக சகஜ யோகம் என்ற நிலைக்கு வருவான்

சகஜ யோகம் உள்விளையவேண்டும்

ஆகவேதான் சாலையார் சதா ஞான உபநிடதம் உன்னுள் தீட்சையாகவேண்டும் என்கிறார்
எளியமுறை குண்டலினி யோகம் வாசி யோகம் கடயோகம் போன்றவை எவ்வளவுதான் பிறரால் உனக்கு பயிற்சி அழித்தாலும் தொட்டு தொட்டு பார்ப்பதைபோலத்தன் உதவுமேதவிர முன்னேற்றம் எதுவும் இருக்காது

உன் முயற்சியாலும் இறைவனின் கிருபையாலும் உனக்குள் தீட்சையாகவேண்டும்

சாலையார் பொன்னரங்க தேவாலயத்தில் தொழுகைக்கு மட்டுமே அனுமதி கொடுத்திருப்பது குருவின் மூலமாக இறைவனின் அருளை பெற்றுக்கொண்டு தனித்து உள்முகமாகத்திரும்பி உனக்கு நீயே தீட்சையாக்கிக்கொள்ள வேண்டும்

ஆகவேதான் பொன்னரங்க தேவாலயம் அருகிலேயே தனியாக தவமாளிகை அமைத்து அவர் தவம் செய்து வந்தார் அடுத்தவருக்கும் சுட்டிக்காட்டினார்

சாலையாரின் ஆவிமண்டல குருபிரான் அவரை 12 ஆண்டுகள் திருப்பரங்குன்றம் மலைக்குகையில் தவம் பயில வைத்தார்

அதுபோல குருவின் மூலமாக இறைவனின் அருளை அளவில்லாமல் பெற்றுக்கொண்டு நாம்தான் தனித்து தியானம் தவம் செய்துகொள்ள வேண்டும்



அவ்வாறு உள்முகப்பயணம் செய்யும்போது இச்சைகள் அடங்கும் . மனித இச்சைகள் இச்சா சக்தியானது யாரும் எதிரில் நின்று வா என அழைக்காமலேயே தன்னிச்சையாக பாயக்கூடியது

எந்தெந்த வீதியின் வழியாக இச்சா சக்தி பாய்கிறதோ அங்கெல்லாம் எப்படி தாளிடுவது என்பதை நீ கற்றுக்கொள்ளவேண்டும்

அவ்வாறு உன் ஞானத்தால் நீ தாளிட்டுக்கொண்டால் கள்ளப்புலனைந்தும் காண்டாமணி விளக்காக மாறி உன் சரீரத்தில் அமுதம் விளையும்

உன் கவணம் உலகத்தில் சிதறி போய்க்கொண்டிருக்கும்வரை நீ சிவா சரீரமாக இருக்கிறாய்

உன் புலன்கள் உலகத்திலிருந்து விடுபட்டு உள்முகமாக உன் உயிரை நோக்கி திரும்பிவிட்டாலோ சிவா வாசி யாக மாறிவிடுகிறது

இதுவே வாசியோகத்தின் சூக்குமம்

வடிவமைக்கப்பட்ட பயிற்சியால் பெரிதாக நீ எதையும் அடையமுடியாது

தொழுகை பிரார்த்தனை மூலமாக குருவருளையும் இறைவனின் திருவருளையும் பெற்றுக்கொண்டு தனித்து உள்முகமாகத்திரும்பி விடு

உலகத்திலிருந்து எவ்வளவுக்கெவ்வளவு தாளிட்டுக்கொல்கிராயோ அவ்வளவுக்கவ்வளவு வாசி மேலேறி துரியத்தை அடையும் அமிழ்தம் உன் சரீரத்தில் விளையும்

அதை உச்சத்தலையில் சமமமாக நிறுத்திக்கொண்டு மகாமந்திரத்தை உள்ளனுபவமாக உணர்ந்து தெளிந்தாயானால் சந்நியாசம் உன்னில் ஊற்றெடுக்கும்

ஆதியில் வெளிப்பட்ட மகாமந்திரங்கள் இரண்டு



ஓம் நமோ சிவாய பஞ்சாட்சாரம்

வெளியே ஜடப்பொருளாகவும் என்னிடத்து சரீரமாகவும் பிரத்தட்சியமாகியுள்ள சிவனாக வெளிப்பட்ட அந்த ஓர் இறைவனையே நமஸ்கரிக்கிறேன்

ஓம் நமோ நாராயணாய அஸ்டாங்க மந்திரம்

வெளியே பிரபஞ்சமாகவும் என்னிடத்து ஆத்மாகவும் பிரத்தட்சியமாகியுள்ள நாராயணனாக வெளிப்பட்ட அந்த ஓர் இறைவனையே நமஸ்கரிக்கிறேன்
அடுத்து வெளிப்பட்ட மகாமந்திரம் கலிமா

அவன் அளவற்ற அருளாளன்
நிகரற்ற அன்புடையோன்

சைவ இசுலாமான வள்ளலாரியமும் இதே கலிமாவை

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி என்கிறது

வெளியே முற்றுயிராகவும் என்னிடத்து உயிராகவும் பிரத்தட்சியமாகியுள்ள (அருப இறைவனை)அந்த ஓர் இறைவனையே நமஸ்கரிக்கிறேன்

இம்மூன்று மந்திரங்களே மகாமந்திரங்கலாகும்

உன் உச்சந்தலையில் துரியத்தில் வாசியை நிலைநிருத்தி உன் சரீரத்தையும் ஆத்மாவையும் உயிரையும் உணர்ந்து தெளிந்தாயானால் சந்நியாச நிலை உன்னில் முகிழ்க்கும்





பிரம்ம சாரி









திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பவரை பிரம்மச்சாரி என கூறிக்கொண்டிருக்கிறோம்

ஆனால் சாலையார் சொல்கிறார் ஆண் பெண் கலவியைத்தவிர்ப்பதற்கும்  பிரம்மச்சாரி என்பதற்கும் எங்காவது பொருத்தம் உள்ளதா இல்லை

பிரம்மத்தில் பரமண்டலத்தில் சஞ்சரிக்கிரவனே பிரம்மச்சாரி

பூலோகத்தில் குரு ஒருவரை அடைந்தவனாக ஒருவன் இருப்பது பரலோக வாழ்விற்கு முதல் படி

அந்த குரு பரலோக சஞ்சாரியாக இருக்கவேண்டும்

நித்தியா கயிலாயவாசி என்றெல்லாம் ஏன் பட்டம் போட்டுக்கொள்கிறார்கள்

பட்டம் போட்டுக்கொண்டால் கயிலாய வாசியாகி விடமுடியுமா

பின்னும் ஏன் போட்டுக்கொள்கிறார்கள் என்றால் இந்த குரு பட்டம் போட்டுக்கொள்வதை நாம் ஏன் இலக்காக வைத்து பரலோகவாசியாக முயற்சிக்கக்கூடாது என சீடர்களுக்கு உள்ளுணர்வு வராதா என்பதற்காகத்தான்

அப்படி பரலோக சஞ்சாரம் ஆவி மண்டல அனுபவம் வேண்டுமானால் அப்படி அனுபவமுள்ள மெய்குருபிறான் ஒருவரை நாடி தேடி கண்டடைய வேண்டும்

அவர் உயிரோடு பூமியில் இயங்கிக்கொண்டிருந்தால் மட்டுமே அவரின் அனுபவத்தால் பரலோக வாசனை அவர் மூலமாக உனக்கும் கிட்டும்

அந்த வாசனையை முகர்ந்தால்மட்டுமே உலகம் உன் மீது திணிக்கும் பலவகையான பாச வாசனைகளிளிருந்து உன்னால் தப்பிக்க முடியும்

உலகம் எப்போதும் நீ மேல்நோக்கி உயர்ந்து விடக்கூடாது என்பதற்காக உன்னை பிடித்து இழுத்துக்கொண்டே இருக்கும்

மனைவி மக்கள் உறவினர் நண்பர்கள் குருமார்க்கம் இயக்கங்கள் என பலவகையான பாசவலைகள் அவர்களைப்பற்றி மட்டுமே உன்னை சிந்திக்கவைப்பார்கள்

இறைவனைப்பற்றி அவரின் பரமண்டல நபர்கள் தேவர்கள் அசுரர்கள் செயல்பாடுகளைப்பற்றி அறிந்துணர விடமாட்டார்கள்

குஞ்சு வளர்ந்தவுடன் ஓட்டை உடைத்தாக வேண்டும்

அப்படித்தான் ஒரு குருகுலத்தில் நீ வளர்ந்து தேறினால் அவர்களை விட்டு கடந்து அடுத்த படியை நோக்கி நீ தேடியாக வேண்டும்

ஆனால் எல்லோரும் எல் கே ஜி யிலேயே சவ்கரியமாய் புகழ் பாடிக்கொண்டிருங்கள் என்றே பிடித்து கொள்வார்கள்

நாமும் வருடக்கணக்கில் எல் கே ஜி யில் சவ்கரியமாய் இருப்பதையே விரும்புகிறோம்

ஏன் வளரவில்லை என்று கேட்டுக்கொள்வதில்லை

அதற்கு நாம் வைத்திருக்கும் சாக்கு நான் வளராமல் இருக்கலாம் ஏன் குரு மிக வளர்ந்தவர் உயர்ந்தவர் அவரையே என்னும் அடையமுடியவில்லை

பிறகெங்கு இன்னும் வளர்ந்து போவது

ஏன் குரு பெரியவர் ஆஹா ஓஹோ என பெருமை பாடிக்கொண்டே காலம் கடத்தி விடுகிறேன் என்பதாகும்

குருவின் பாச வாசனைகளை கற்றுக்கொண்டு கை மாற்றி இன்னும் மேம்பாடான குருவை தேடிக்கொண்டிருக்கும் தாகம் உன்னுள் ஒளிர்ந்துகொண்டே இருக்க வேண்டும்

அந்த அடங்காத தாகம் இறைவனை ருசி பார்க்கவேண்டும் என்ற தாகமாக இருக்கவேண்டும்

இறைவனைக்குரித்த தாகத்தை பலர் தாழ்வு மனப்பாண்மையால் கைவிட்டு விடுகிறார்கள்

உன் சரீரத்தில் ஆத்மாவில் உள்ள பாசவாசனைகளை ஒவ்வொன்றாக கடந்து செல்லும்போது உன் சத்சங்க குழுவும் மாறும்

உன் உள்தகுதி வளர்ச்சியுற்றால் அதற்கேற்ப புதிய சத்சங்கம் உன்னை வந்தடையும்

ஒரே கூட்டத்தில் நீ செம்படித்துக்கொண்டிருந்தால் உன் தகுதி ஒரு தம்பிடி கூட முன்னேறவில்லை என்றே அர்த்தமாகும்

முன்னேற்றம் என்பது குடிசையை மாற்றி உயரும் கவனரச குளிகை சித்தித்தால் மட்டுமே சாத்தியம்

குளிகை செய்தல் என்பது பெளதீகமாக என சிலர் முயற்சிக்கிறார்கள்

பறப்பதற்கு இரு குளிகை இருக்கிறது அதை பெற்று கையில் வைத்துக்கொண்டால் ககன மார்க்கமாக பயணம் போகலாம் என்கிறார்கள்

அப்படி பயணம் போனவர்கள் யாரும் அந்த குளிகை வைத்திருக்கவில்லை

நம் மனப்பான்மை அறிவு நிலை உயர உயர ஞானம் விளைய விளைய சித்திகள் இறைவனால் அருளப்பெரும்

அப்போது தானாகவே குண்டலினி வாசி துரியத்தில் ஏறி நின்று விளையாடும்

ஒரே ஒரு சின்ன சூத்திரம் சொல்கிறேன்

குண்டலினி மேலேம்பி மனிபூரகத்தை எட்டினால் ஆவிமண்டல தாக்குதல் உண்டாகும் அப்போது தீய ஆவிகள் கொஞ்ச நாள் உங்களை வாட்டிவதக்கி தடுமாறி சோர்வடைவதை  தடுக்க இயலாது

அந்த அனுபவத்தில் நீங்கள் முட்டி மோதும்போதே தேவ ஆவிகள் உங்களை கைதூக்கி விட இறைவனால் அனுப்பப்பட்டு தேற்றம் அடைவீர்கள்

அந்த அனுபவம் வந்த பிறகே ஆவிமண்டலத்தில் தேவ ஆவி எது அசுர ஆவி எது தரம் பிரித்தறியும் நுழைபுலம் உண்டாகும்

ஆவிகளை பகுத்தறியும் ஞானம் ஆன்ம வாழ்வில் ஒரு மைல்கல்

ஓரிடத்தின் வழியாக நீங்கள் சென்றுகொண்டிருக்கும் போதே உங்களை சுற்றிலும் ஆவி மண்டலத்தில்  மாற்றங்கள் உண்டாவதை நிதானித்துக்கொண்டும் சூழ்நிலைக்கேற்றவாறு பிரார்தித்துக்கொண்டும் இருந்தாக வேண்டும்

தியானத்தின் சித்திகளில் ஒன்றான உங்கள் பிரணவ  தேகம்  எல்லைஆரா அதிகரிக்க அதிகரிக்க  உன் இயக்கம் பிரம்மத்தில் பாதிப்பை உண்டாக்கும்

உன்னைக்கொண்டு உலகில் ஆவிமண்டலத்தில் இறைவன் மாற்றங்களை செய்விப்பார்

அப்படி பிரம்மத்தில் உலவுகிரவனாக ஆனவனே பிரம்ம சாரி என்கிறார் சாலையார்



 

வான பிரஸ்தன்









ஆதியில் மன்னர்கள் குடிமக்கள் அனைவரும் பிள்ளைகள் பொறுப்புக்கு வந்தவுடன் அவர்களிடம் விட்டுவிட்டு வனவாசம் சென்றுவிடுவார்கள்

அங்கு தவக்குடில்கள் அமைத்து இறை நெறியை கற்பிக்கும் யோகிகள் ஞானிகளிடம் கணவனும் மனைவியும் தங்கி சேவை செய்து ஆன்ம பலத்தை பெருக்கும் தவ வாழ்வில் இருப்பார்கள்

இத்தயவை குரு குலங்கள் எனப்பட்டன

சிறுவர்களுக்கு கல்விக்கூடமாகவும் இவை இருந்தன

இப்போதோ மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது

இருக்கிற இடத்திலிருந்தே ஆன்ம வாழ்வுக்கு பல வழிமுறைகள் வந்துவிட்டன

இருப்பினும் இவைகள் வனப்பிரஸ்தம் அல்ல என்கிறார் சாலையார்

வான மண்டலத்தில் யாருடைய பெயர் பிரஸ்தாபம் அடைகிறதோ அவனே வானப்பிரஸ்தி

நம்முடைய ஆன்ம வாழ்வில் இறைவனின் அருள் அளவு அதிகரித்து நாம் இறைவனின் அருள்களமாக நடமாடும் போது பிரம்ம சாரியாக நம்மை சுற்றிய இயற்கை மற்றும் ஆவிமண்டல சக்திகளின் மீது பாதிப்பை ஏற்படுத்துவோம் என சாலையாரின் உபதேசத்தை அறிந்தோம்

அந்த பிரம்மசாரிய வாழ்க்கையில் ஆவிமண்டல சக்திகளை நாம் நல்லினக்கப்படுத்த நல்லினக்கப்படுத்த அவைகளால் நமக்கு வரங்கள் சித்துக்கள் உண்டாகும்

அவைகளை இறை பேரரசின் விரிவாக்கத்திற்கு இறைவனின் குறிப்பறிந்து நாம் பயன்படுத்த வேண்டும்

இறைவனின் பேரால் சுயராஜ்ஜியம் செய்கிறவர்களாக அநேகரை அசுர ஆவிகள் திசை திருப்பி விடும்

அப்படியில்லாமல் சரணாகதியை கற்றுக்கொண்ட ஆத்மாக்கள் இறைவனின் ராஜ்ஜியத்தை அன்றி தங்கள் ராஜ்ஜியத்தை கட்டமாட்டார்கள்

அப்படிப்பட்டவர்களுக்கு இறைவனின் கருவி என்ற அந்தஸ்து உண்டாகும்

அவர்களுக்கு ஆவிமண்டலத்தில் மணிமுடி அழகான கவசகுண்டலங்கள் உண்டாகும்

இது இறைவனால் அருளப்படும் பிரணவதேகத்தோடு சம்பந்தப்பட்டது

நம் ஏல்லோருக்கும் ஸ்தூலதேகம் சூக்குமதேகம் என இரண்டு தேகம் இருக்கிறது

நம்முள் இறைவனின் அருள்நிலை அதிகரிக்கும் போது மூன்றாவது தேகமான பிரணவதேகம் உண்டாகும்

இது கவசம் போல

பிரணவதேகம் இல்லாத நபர் மீது ஆவிமண்டல அசுர சக்திகள் ஆதிக்கம் செலுத்தும்

அவர்களை தூண்டிவிட்டு தங்கள் இச்சையை தனித்துக்கொள்ளும் கோபம் சண்டை சச்சரவுகள் அனைத்தையும் தூண்டி குழப்பத்தை சமூகத்தில் உண்டாக்கும்

பிரணவதேகம் உள்ளோரை கண்டால் அவைகள் விலகிச்சென்றுவிடும் ஆதிக்கம் செய்யமுடியாத அளவு கவசம் அது

தேவசக்திகள் நல்லிணக்கமாகும்

பூமியில் இறைபேரரசின் தளகர்த்தர்களாக உள்ள இப்படிப்பட்டோரின் பெருமை பரமண்டலத்தில் குடியேறி தேவர்களால் அவனைப்பற்றி பிரஸ்தாபமாக பேசப்படுமாம்

இவனே வான பிரஸ்தி

துறவு அறம்












துறவறம் எதுவென சாலையார் கூறுகிறார்

சதா சலிக்காமல் உலகத்தை தொடர்புகொண்டு அதை அனுபவிக்கும் இயல்புள்ளது மனிதனது ஐம்புலன்கள்

மரணிக்கும் தருவாயில் கூட அனுபவிக்க துடிக்கும் நிறைவேறாத ஏக்கத்தோடு பல ஆத்மாக்கள் மரணித்து மறுபிறவிக்கு செல்ல முடியாமல் அலைவதும் உண்டு

புலன்களின் பின்னால் ஓடும் ஆத்மாக்கள் பல உலகத்தில் வாழ்ந்த காலத்தில் நுகர்ச்சிக்காக தவதாயப்பட்டு பல பாவங்களுக்கு இலக்கானதும் அல்லாமல் இறந்த பின்னும் நிறைவாக அடுத்த பிறவியை நோக்கி செல்லாமல் அப்பிறவியின் தொடர்புள்ளவர்களையே சுற்றிசுழன்று சந்ததியாரின் வாழ்வையும் கெடுத்துக்கொண்டு இருப்பாரும் உண்டு

தன்னை உணர்ந்து தன்னையே ஒடுக்கும் ஆன்மீகர்களோ தன் முதல் எதிரிகள் தனது ஐம்புலன்களே என்பதை அறிவர்

உலகத்தோடு யுத்தம் செய்வதை விடுத்து தன்னோடு உத்தம் செய்கிறவனே ஞானியாவான்

அந்த யுத்தத்தில் தனது உயிர் என்னும் காவி ஏறி புலன்களை அடக்குகிறவனே துறவி

சதா வெளியே பாய்ந்து ஓடும் ஐம்புலன்களின் கதவை உள்ளிருந்து தாளிட்டுக்கொள்கிறான்

அவன் அறிவால் உலகை கவணிக்கிறான் அவைகளின் பின்னால் புலன்கள் ஓடுவதற்கு அனுமதிப்பதில்லை அதாவது மனம் தன்னிச்சையாக இயங்குவதில்லை

அறிந்ததோடு சரி மனம் இயங்க அனுமதிப்பதில்லை

அவன் அறிவு அனுமதித்தால் அவனது மனமும் புலன்களும் ஒரு விசத்தில் இயங்குகிறது

அவன் விரும்பாத விசயத்தில் அருகில் இருக்கும் பொருள் ஒன்றை அவன் கவணிக்காதது போல அவனது புலன்கள் உள்தாளிப்படுகின்றன அதனால் அவன் மனம் இயங்குவதில்லை

மனதின் இயக்கமே ஒரு மனிதனின் சக்தி செலவாவதற்கு காரணம்

தேவைப்பட்டால் அவன் மனம் இயங்கும் தேவைப்பட்டால் அவன் மனம் ஓடுங்கிவிடும்

ஞானியின் மனம் ஆமையைப்போன்றது

விரும்பினால் ஐம்புலன்களை விரித்து உலகில் இயங்கும் தேவைப்பட்டால் அவயங்களை உள்ளிழுத்து தாளிட்டுக்கொண்டு எதனாலும் பாதிக்கப்படாமல் ஒடுங்கிக்கொள்கிறான்

மனம் வெளியே தாவிச்செல்லாதபடி எதிலாவது போய் ஒடுங்கவேண்டுமல்லவா ?

அது எது என்றால் முதலாவது அவனவனது ஆத்மாவே ஆகும்

தனக்குள் தானே ஒடுங்கி நிம்மதியடைகிறான் யோகி

தனக்குள்தானே ஒடுங்கி ஆவிமண்டல சக்திகள் எதனாலும் புற உலகம் எதனாலும் பாதிப்புகள் இல்லாத கோட்டையாக தனது ஆத்மா இருப்பதை ஞானி அனுபவத்தில் அறிவான்

அவ்வாறு ஒடுங்கியவன் புற உலகத்திற்கும் தனக்கும் ஒரு கதவை அடைத்துக்கொள்கிறான் என்கிறார் சாலையார்

இதனால் வரும் மற்றோர் பலன் என்ன ?

அடங்காத மனம் அடங்கினால் அதனால் விரையமாகாமல் சக்தி சேமிப்படையும் உள்ளொளி வளர்ந்து பொங்கும்

அது எதுவென்றால் மனிதனில் இயங்கும் வாசியே ஆகும்

அந்த வாசி பொங்கி எழுந்து உச்சந்தலையை தானாகவே அடையும்

வாசி யோகம் என்கிற பெயரில் அதை ஒரு தொழில்நுட்பமாக மனிதர்கள் சிலர் பயிற்சிக்கிரார்கள்

மூச்சை இழுத்து அடக்கி வெளியேற்றி என பயிற்சியால் அந்த வாசியின் தொடர்பை அவர்கள் பெருக்க முயற்சிக்கிறார்கள்

பாத்தியிலே எவ்வளவுதான் தண்ணீர் பாய்ச்சினாலும் நண்டு வளையிருந்தால் தண்ணீர் தேங்காது ஓடுக்கொண்டே இருப்பதைப்போல வாசி யோகிகளின் முயற்சிகள் எல்லாம் அவர்களின் மனதின் அலைச்சலினால் வழிந்தோடி விடும்

தன்னை தானே உணராதவனும் தன் புலன்களை அடக்கி அறியாதவனும் செய்கிற வாசி யோகத்தால் கொஞ்சம் ருசி பார்ப்பானே தவிர முன்னேற்றம் அடைவதில்லை

ஆனால் மனதை ஆத்மாவில் ஒடுக்கி பழகியவன் கொஞ்ச நேரம் ஒடுங்கி இருந்தாலே போதும் மூலாதார கனல் பொங்கி பெருகி உச்சியை எட்டும்

உலகையும் அண்டத்தையும் படைத்த வித்து எதுவோ அந்த வித்தாகிய முற்றுயிரின் கனல் எதுவோ அதவே சிற்றுயிராகிய உன் உயிரில் உள்ள கனலுமாகும்

அதன் சக்தி விரையமாகாது உனது மனம் ஆத்மாவில் ஒடுங்குமானால் அந்தக்கனல் மிகுந்து எழும்பி துரியத்தில் நிற்கும் அதாவது வாசி துரியத்தில் நிற்கும்

துரியத்தில் வாசி நின்று அண்டத்தின் வாசியோடு கலந்து விளையாடும்போது உன் சரீரம் உன் மீது ஆதிக்கம் செய்யமுடியாது அடங்கி விடும் சரீரத்தின் உணர்வுகள் ஒடுங்கி விடும்

பிண்டத்தின் வாசி அண்டத்தின் வாசியோடு கலந்து விளையாடுவதால் ஆவிமண்டலத்தொடு தொடர்புகள் அதிகரிக்கும்

அத்தகையவன் ராஜாவாக இருந்தால் ராஜரிஷியாகவும் ; யுத்தகளத்தில் இருந்தால் நிஸ்காமிய கர்மியாகவும் : வியாபாரியாக இருந்தாலும் கர்மயோகியாகவும் ; இளவயது மனைவியோடு காமத்தை அளவு முறையோடு துய்த்து நற்சந்ததியை வளர்க்கிரவனாகவும் இருப்பானே தவிர உலகம் அவனை ஆளுகை செய்யாது

அவன் உலகில் இருப்பானே தவிர அவனுள் உலகத்தால் புகுந்து நிலைக்கமுடியாது

அவ்வாறு தனக்குள்ளிருந்து உலகை துறக்கிரவனே துறவி

புளியம் பழம் எவ்வாறு தனது ஓட்டை விட்டு தன்னைத்துண்டித்து கொண்டு ஒட்டாமல் இருக்கிறதோ அதைப்போல உலகில் இருந்தாலும் உலகத்தோடு ஒட்டாமல் தனித்தவனாகவும் விளித்தவனாகவும் இருப்பான்

துறவு அறத்தில் இருப்பவன்


காப்பு பாடல்

அமுத கலைஞானம் என்பது மகா குரு சாலை ஆண்டவரால் இயற்றப்பட்டது கவிகளாக கேள்வி பதிலா போல அற்புதமாக நமது பாராம்பரிய வேத ஞானங்களை சொல...